நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் "வருத்தப்படாத வாலிபர் சங்கம்". அந்த படத்தில் சிவகார்த்திகேயன், சூரி காமெடி கூட்டணி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
அதில் சூரிக்கு ஜோடியாக ஷாலு ஷம்மு நடித்திருந்தார். அதன் பிறகு தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், சகலகலா வல்லவன் உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தார்.
தொடர்ந்து சினிமாவில் துணை நடிகையாக நடித்து வரும் ஷாலு ஷம்மு, சமீப காலமாக சோசியல் மீடியாவில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது தாவணி-பாவாடையில் தனது நண்பருடன் கவர்ச்சி ஆட்டம் போடும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களிடம் திட்டு வாங்கி வருகிறார் அம்மணி.
