சினிமாவில் கதாநாயகிகளின் தோழியாகத் தொடர்ந்து நடித்து வந்தாலும் தனது தொடர்ந்த பப்ளிசிட்டி ஸ்டண்ட்களால் வலைதளங்களில் அடிக்கடி வைரலாகிவரும் ஷாலு சம்மு லேட்டஸ்டாக தனது மேக்கப் வுமன் கம் தோழிக்கு உதட்டு முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சூரியின் காமெடி கலாட்டாக்கள் நிறைந்த ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்ற படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.மேலும் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்த ஸ்ரீதிவ்யாவுக்கு இப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.
மேலும் தோழியாக படம் முழுவதும் அவருடன் நடித்த ஷாலு சம்முவும் சற்று கும்மென்று இருந்ததால் நல்ல ரீச்சை அடைந்தார். நல்ல தமிழ் நிற தோற்றத்தை உடைய இவர் நாகர்கோவிலில் பிறந்தவர்.சென்னை எத்திராஜ் கல்லுரியில் படித்தவர்.
இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கருப்பழகியாக ஒரு கிராமத்து பெண் போல நடித்திருந்தார். மேலும், அந்த படத்திற்கு பின்னர் தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தில் காமெடி நடிகர் சதீஸின் காதலியாக நடித்திருந்தார்.
இந்நிலையில், தனது தோழிக்கு உதட்டுமுத்தம் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
