பலே வெள்ளைய தேவா திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகர் தன்யா ரவிச்சந்திரன். அதை தொடர்ந்து அருள் நிதி நடிப்பில் பிருந்தாவனம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
ஆனால் இந்த இரண்டு திரைப்படங்களும் இவர்க்கு சரியான அங்கீகாரத்தை தரவில்லை. அதை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதியுடன் கறுப்பன் என்ற திரைப்படத்தில் நடித்தார் நடிகை தன்யா.
கருப்பன் திரைப்படம் இவருக்கு வசூல் ரீதியாகவும் விமர்ச்சன ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்தது. கருப்பன் திரைப்படத்தில் மிகவும் குடும்பப்பாங்கான பெண்ணாக நடித்திருந்தார் நடிகை தன்யா.
தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த டஸ்கி ப்யூடியாக இருக்கும் இவரது நடிப்பும், தோற்றமும் பலரால் ரசிக்கப்பட்டு, ஏகப்பட்ட சினிமா ரசிகர்கள் தன்யாவின் ராசிகர்களாக மாறினர்.
இந்நிலையில், புடவை சகிதமாக இருந்த இவர் தற்போது மாடர்ன் உடையில் சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார்.
தற்போது, மாயோன் என்ற ஒரே ஒரு தமிழ் படத்தில் மட்டும் நடித்துள்ளார். தனக்கு பொருத்தமான சிறந்த கதை கிடைத்தால் மட்டுமே தொடர்ந்து நடிப்பது என்ற முடிவில் இருக்கிறாராம் அம்மணி.




