கொளு கொளு கப் ஐஸாக இருந்த ஹன்ஷிகா இப்படி குச்சி ஐஸ் ஆகிட்டாங்களே..! - வைரல் புகைப்படங்கள் - புலம்பும் ரசிகர்கள்


சில ஹிந்தி படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஹன்ஷிகா, ஹீரோயினாக நடித்த முதல் தெலுங்கு படம் ‘தேசமுடுரு’. இதனைத் தொடர்ந்து தமிழ் திரையுலகில் தனுஷின் ‘மாப்பிள்ளை’ படத்தின் மூலம் என்ட்ரியானார். 

அதன் பிறகு விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், விஷால், கார்த்தி, ஜெயம் ரவி என பல பிரபல நடிகர்களின் படங்களில் நடித்தார். ஹிந்தி, தெலுங்கு, தமிழ் மட்டுமின்றி மலையாளத்தில் ஒரு படமும், கன்னடத்தில் ஒரு படமும் ஹன்ஷிகா நடித்திருக்கிறார். 


தற்போது, ஹன்ஷிகாவின் கால்ஷீட் டைரியில் ‘மஹா, பார்ட்னர்’ ஆகிய இரண்டு படங்கள் இருக்கிறது. அவ்வபோது தனது புகைப்படங்களை ஹன்ஷிகா சமூக வலைதளங்களில் வெளியிடுவார். 


இந்நிலையில், கவர்ச்சியாக போட்டோஷூட் எடுக்கப்பட்ட தனது புகைப்படங்களை ஹன்ஷிகா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார். இப்புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


இதனை பார்த்த ரசிகர்கள், ஒரு காலத்தில் கொளு கொளு கப் ஐஸ் போல இருந்தவர் இப்போது கரைந்து உருகி குச்சி ஐஸ் ஆகிவிட்டாரே என்று புலம்பல் புராணம் பாடி வருகிறார்கள்.