"ஹேப்பி வீக் என்ட்" - கிளுகிளு புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளின் இதயத்தை வீக் ஆக்கிய நடிகை சுரபி..!


சினிமாவில் முன்பெல்லாம் கவர்ச்சியாக நடிப்பதற்கென்று பிரத்தியேகமாக நடிகைகள் இருந்தார்கள். ஆனால் இப்போதெல்லாம் ஹீரோயின்களே அதையும் சேர்த்தே செய்யத் துவங்கி விட்டனர். 

அதேபோல் பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் தங்கள் கவர்ச்சிப்புகைப்படங்களை வெளியிட்டு பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றனர். இந்த பட்டியலில் இப்போது நடிகை சுரபியும் இணைந்து இருக்கிறார். 

விக்ரம் பிரபு நடித்த இவன் வேற மாதிரி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சுரபி டெல்லியை சேர்ந்தவர். இவர் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பேமஸ் ஆனார். 


ஆனாலும் தமிழில் வாய்ப்புகள் வரிசை கட்டாததால் தெலுங்கு பக்கம் தாவினார். அம்மணியின் கைவசம் இப்போது இரண்டு தெலுங்கு படங்கள் உள்ளன. 


ஆரம்பத்தில் கவர்ச்சி பாத்திரங்களில் நடிக்க மறுப்பு தெரிவித்து வந்த சுரபி,இப்போது தாராளம் கவர்ச்சி காட்டுகிறார். அதிலும் இப்போது தன் கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு "எல்லோருக்கும் ஹேப்பி வீக் என்ட்" என்று கூறியுள்ளார். அந்த படங்கள் இப்போது வைரலாகி வருகின்றன.