பத்தல.. என் ஆசை அடங்கல.. இன்னும் பண்ணனும்.. மொட்டை மாடியில் சிறுமியுடன்.. தாய் செய்த அசிங்கம்..

பானிபட் (ஹரியானா), டிச. 5 : ஹரியானா மாநிலம் பானிபட் மாவட்டத்தில் கடந்த இரு ஆண்டுகளாக நடந்த நான்கு குழந்தைகள் மரணங்கள் வெறும் விபத்துகள் அல்ல என்பது இப்போது உறுதியாகியுள்ளது.

அந்த நான்கு கொலைகளுக்குப் பின்னாலும் ஒரே நபர் – 32 வயதான பூனம் ராணி எனும் பெண். கொல்லப்பட்டவர்களில் அவரது சொந்த ஆறு வயது மகனும் அடங்குவார்.

காவல்துறை முன் பூனம் அளித்த வாக்குமூலம் நாட்டையே உலுக்கியுள்ளது. “என்னைவிட அழகாக யாரும் இருக்கக் கூடாது. குறிப்பாகப் பெண் குழந்தைகள் என்னை மிஞ்சக் கூடாது” என்பதே அவரது ஒரே காரணம்.

முதல் கொலை 2023-ல் தொடங்கியது. தன் அண்ணன் மனைவி கீதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) முதல் பெண் குழந்தையைத் தண்ணீரில் மூழ்கடித்தார். அதை விபத்து எனக் காட்டி தப்பினார்.

அதன் பிறகு, கீதாவின் மற்ற இரு பெண் குழந்தைகளும் அதே முறையில் கொல்லப்பட்டனர். மூன்று கொலைகளும் குடும்பத்தினரால் சந்தேகிக்கப்படாமல் போனது.

கடைசி சம்பவம் நாவுல்டா கிராமத்தில் உறவினர் திருமண வீட்டில் நடந்தது. ஆறு வயது அண்ணன் மகளை ஆழம் குறைந்த தண்ணீர் தொட்டியில் தலைகுப்புறத் தள்ளி கொன்றார். குழந்தையின் கால்கள் தரையைத் தொட்ட நிலையிலேயே உயிரிழந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

குழந்தையின் தந்தை அளித்த புகார் அளித்தார். தன்னுடைய மூன்று குழந்தைகளை இழந்த கீதாவிற்கும் பலத்த சந்தேகம். இது இயற்கையான மரணமாக இருக்க முடியாது. என் குழந்தைகளும் இப்படித்தான் கொல்லப்பட்டிருபார்களா..? என்று கதறினார். புகாரில் தன்னையும் பாதிக்கப்பட்டவராக இணைத்துக்கொண்டார்.

இதனால், போலீஸ் விசாரணை தீவிரமானது. நான்கு மரணங்களிலும் இருந்த ஒற்றுமை கண்டறியப்பட்டது. எல்லா குழந்தைகளும் ஆழம் குறைவான தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளனர். குழந்தை இறந்து கிடந்தது மொட்டை மாடியில் ஒரு சிறிய பிளாஸ்டிக் தொட்டியில்.

பலரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பூனம் ராணி கடைசியாக மொட்டை மாடிக்கு சென்றார் என்று ஒருவரும், பூனம் ராணி இந்த பிளாஸ்டிக் தொட்டியில் தண்ணீர் நிரப்பிக்கொண்டிருந்ததை நான் பார்த்தேன் என இன்னொருவரும் சாட்சி கூற, பூனமிடம் அழைத்து விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது. உடனடியாக, கைது செய்யப்பட்ட அவர் 36 மணி நேரத்தில் பூனம் அனைத்துக் கொலைகளையும் ஒப்புக்கொண்டார்.

அதிர்ச்சி தரும் தகவல்: “பெண் குழந்தைகள் மட்டுமே இறந்தால் சந்தேகம் வந்துவிடும் என்றும், என் மீதும் மட்டும் சந்தேகம் வராமல் இருக்க, என் சொந்த மகனையே கொன்றேன்.. நானும் பாதிக்கப்பட்டவள் தான் என்று அவர்களுடன் இணைந்து கொண்டேன்” என்றார்.

குற்ற உணர்வு பற்றிக் கேட்டதற்கு, “கொன்ற பிறகு தான் நான் நிம்மதியாகத் தூங்கினேன். இப்போதும், எனக்கு எந்த ஒரு வருத்தமும் இல்லை.. பத்தல.. என் ஆசை அடங்கல.. இன்னும் பண்ணனும்..” என்று பதிலளித்தார். பூனமுக்கு மனநலப் பிரச்சினை இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார். வழக்கு பதிவு செய்யப்பட்டு, பூனம் நீதிக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். கொலை, சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு நடக்கிறது. நான்கு மழலைகளின் உயிரைப் பறித்த இந்தச் சம்பவம் ஹரியானா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Summary in English : In Panipat, Haryana, 32-year-old Poonam Rani confessed to drowning four children – including her own 6-year-old son and three nieces – over two years, driven by jealousy that they were more beautiful than her. She staged the killings as accidents and felt no remorse.