பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்கெடுத்தவர் ஐஸ்வர்யா தத்தா. இவர், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதி போட்டி வரையில் வந்தவர். வின்னராக வாய்ப்புக் கிடைக்காவிட்டாலும், ரன்னரானார்.
அதன் பின், அவருக்கு தொடர்ச்சியாக நடிக்க வாய்ப்புகள் கிடைக்க, தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது அலேகா, கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன் டா, கன்னித்தீவு, பொல்லாத உலகில் பயங்கர கேம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.
படங்களில் நடிப்பதற்கிடையே, அவர் போட்டோ ஷூட் நடத்தி, அதை சமூக வலைதளங்களில் வெளியிடுவதில் முனைப்புடன் இருந்து வருகிறார்.
அப்படி எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் மூலம், கையில் மது கோப்பையுடன், முழுத்தொடையும் தெரியும் அளவிற்க்கு அவர் எடுத்துக் கொண்ட கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட, அது வைரலாகி வருகின்றது.





