பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வரும் "தேவதையை கண்டேன்" என்ற சீரியலில் நடித்து வரும் நடிகர் ஈஸ்வர் மீது அவரது மனைவியும், சீரியல் நடிகையுமான ஜெயஸ்ரீ புகார் கூறியதால் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
நடிகர் ஈஸ்வர் "தேவதையை கண்டேன்" சீரியலில் நடிக்கும் நடிகை VJ மஹாலக்ஷ்மியுடன் தொடர்பில் இருக்கிறார் என்பது தான் ஜெயஸ்ரீ புகார். தற்போது, நடிகை மஹாலக்ஷ்மி தலைமறைவாக உள்ளார்.
இந்நிலையில் மஹாலக்ஷ்மி பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே திருமணமான மஹாலக்ஷ்மி கணவரை பிரிந்து இருந்துள்ளார்.
தேவதையை கண்டேன் சீரியலில் வில்லன் வேடத்தில் நடித்துவந்த புதுமுக நடிகருடன் நெருக்கமாகி அவருடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தாராம்.
ஒரு சமயத்தில் அவர்கள் பிரிந்துவிட அந்த நடிகர் மஹாலட்சுமியுடன் நெருக்கமாக இருந்த எசக்கு பிசக்கான புகைப்படங்களை வைத்து மிரட்டியுள்ளார்.
தனக்கு சம்பந்தமே இல்லாத இந்த பிரச்சனையில் மஹாலக்ஷ்மியை காப்பாற்றுக்கிறேன் என்று உள்ளே வந்துள்ளார் நடிகர் ஈஸ்வர். அந்த பிரச்னையில் தனக்கு உதவி செய்ததால் அப்போது முதல் ஈஸ்வருடன் நெருக்கமாகி தற்போது ஈஸ்வர் குடும்பத்தையும் நடு ரோட்டில் நிறுத்தியுள்ளார் VJ மஹாலக்ஷ்மி.
தலைமறைவாக இருக்கும் அவர் வெளியே வந்து நடந்த விஷயங்களை பேசினால் தான் இந்த பிரச்னைக்கு உண்மையான காரணங்கள் என்ன என்பது தெரிய வரும்.


