இந்த தமிழ் நடிகர் மீது எனக்கு கிரஷ் - ஓப்பனாக கூறிய பிக்பாஸ் நடிகை ரித்விகா


தமிழ் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ரித்விகா.இவர், விபச்சாரியாக நடித்த டார்ச்லைட் திரைப்படம் சொல்லிகொள்ளும் அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. 

டார்ச் லைட் திரைப்படத்தில் மிகவும் மோசமான படுக்கை காட்சிகளில் நடித்து ரசிகர்களை ஷாக் ஆகியிருந்தார் ரித்விகா. ஆனால் தற்போது, இவர் நடித்துள்ள "குண்டு" என்ற படம் சென்ற வாரம் ரிலீஸ் ஆனது. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.

இந்த படத்தின் ப்ரோமொஷனுக்காக பிரபல தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ள ரித்விகாவிடம் தமிழ் சினிமாவில் உங்களுக்கு யார் மேலாவது கிரஷ் ஏற்பட்டுள்ளதா என்று கேட்டனர்.

அதற்குபதிலளித்த அவர் , விஜய் சேதுபதி மீது என கிரஷ் உள்ளது. மேலும், நடிகர் ஜெய்சங்கர் மீதும் எனக்கு கிரஷ் இருந்தது என கூறினார்.