மலையாளத்தில் நிவின் பவுலி நடித்த பிரேமம் திரைப்படம் மலையாளத் திரையுலகில் மட்டுமல்லாது தமிழ் தெலுங்கு என்று பல்வேறு மொழிகளிலும் சூப்பர் டூப்பர் ஹிட் அடைந்தது. இந்த படத்தின் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்களிடம் பிரபலமடைந்தவர் நடிகை மடோனா செபாஸ்டியன்.
தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியன காதலும் கடந்து போகும் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிட்சயமானார். தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடிக்க வில்லை என்றாலும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருகிறார்.
மேலும், ஹீரோவை கட்டிப்பிடிக்க மாட்டேன். முத்தம் கொடுக்க மாட்டேன். கவர்ச்சி காட்ட மாட்டேன் என்று ஏகத்துக்கும் கெடுபிடி ஆர்டர்களை போட்டதால் சினிமா வாய்ப்புகள் குறைந்து விட்டது.
இவரை லேடி சத்யராஜ் என்று மீம்ஸ் போட்டு கிண்டல் செய்த ரசிகர் கூட்டமும் உள்ளது. மடோனா செபாஸ்டின் மற்ற நடிகைகளைப் போல அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்துவது இல்லை இருப்பினும் தனது அன்றாட நடவடிக்கைகளை சமூக வலை தளத்தில் பதிவிட்டு வருவது வழக்கம்.
ஆனால், சமீபத்தில் ஸ்லீவ்-லெஸ் உடையில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி.



