கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவை ஆட்டிப்படைத்தது வரும் ஒரு பிரச்சனை இளம் பெண்கள், குழந்தைகள் கற்பழிப்பு சம்பவம். இதற்கு கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.
கற்பழிப்பு குற்றம் நிருபிக்கப்பட்ட ஒருவரை பொது இடத்தில் தூக்கிலிட வேண்டும் என்ற கோரிக்கைகள் சமீப காலமாக வலுத்து வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க பெண்கள் தங்களை தற்காத்துகொள்ள பழகி கொள்ள வேண்டும் என்ற பேச்சும் எழுகிறது.
அந்த வகையில், சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற கற்பழிப்பு சம்பவம் ஒன்று நாட்டு மக்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது குறித்து பிகில் பட நடிகை வர்ஷா பொல்லம்மா கூறுகையில், உங்கள் அக்கா, தங்கைகளுக்கு பெப்பர் ஸ்ப்ரே-வை பரிசளியுங்கள். ஆன்லைன் மார்க்கெட்டில் மிகவும் குறைந்த விலைக்கு இது கிடைகின்றது.
தளபதி சொன்னது போல நல்ல விஷயங்களை ட்ரென்ட் செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.



