தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக, கருப்பன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மாட்டிஹதியில் பிரபலமானவர் நடிகை தான்யா ரவிச்சந்திரன்.
கருப்பன் படத்திற்கு முன்பே தான்யா பலே வெள்ளையதேவா, பிருந்தாவனம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஆனால் அப்படங்கள் அவருக்கு சரியான வரவேற்பை பெற்றுக் கொடுக்காத நிலையில் கருப்பன் திரைப்படம் தான்யாவுக்கு அடையாளத்தை கொடுத்தது. தற்போது நடிகை தன்யா,சிபிராஜுக்கு ஜோடியாக ‘மாயோன்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இவரது உண்மையான பெயர் அபிராமி என்பதாகும். ஆனால், அபிராமி என்ற பெயரில் ஏற்கனவே பிரபல நடிகை ஒருவர் இருப்பதால் சினிமாவில் தனித்து தெரிய வேண்டும் என்று இயக்குநர் மிஷ்கின் அவர் பெயரை தான்யா என மாற்றுமாறு கேட்டுக்கொண்டார்.
அதன்படி, அபிராமியாக இருந்த அவர் தன்யா ரவிச்சந்திரன் என்று தனது பெயரை மாற்றி கொண்டு சினிமாவிற்கு வந்தார். கருப்பன் படத்தின் ஹோம்லியாக நடித்த இவர் சமீபத்தில் மார்டன் ட்ரெஸில் கவர்ச்சி போட்டோஷுட் நடத்தி "எதற்காக நிற்கிறீர்களோ.. அதற்காக தைரியமாக நில்லுங்கள்" என்று கூறியுள்ளார்.




