அய்யய்யோ.. அது நான் இல்லைங்க - போட்டோஷாப் பண்ணிட்டாங்க - பதறும் நடிகர் விஜய்யின் மேனேஜர்..!


நடிகர் விஜய் தற்போது தனது 64ஆம் படமான மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருந்து வருகிறார். இப்படமே இன்னும் வெளிவராத நிலையில் ரசிகர்கள் விஜய்யின் 65 மற்றும் 66 படங்களின் அப்டேட்கள் இணையத்தில் கசிந்த வண்ணம் உள்ளன.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விஜய் 65 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாக இன்று காலை முதல் தகவல் இணையத்தில் வட்டமிட்டு கொண்டிருந்தது. இதுகுறித்து #thalapathy65 டேக் ஒன்றும் ட்ரெண்டிங்கில் இடம் பெற்றது. 

இதை மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளராக பணிபுரிந்து வரும் ஜெகதீஷ் வாட்ஸ் அப்பில் பகிர்ந்ததாக புகைப்படங்களும் வெளியாகின. 

இந்நிலையில் ஜெகதீஷிடம் ரசிகர் ஒருவர் இதுகுறித்து கேட்க அதற்கு அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "அது என்னுடைய உண்மையான ட்விட்டர் பக்கம் கிடையாது யாரோ போட்டோஷாப் செய்துள்ளனர்" என்று பதறிபோய் விளக்கம் அளித்துள்ளார்.