நடிகர் விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். கிட்ட தட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஷூட்டிங் முடிந்து படம் ஏப்ரில் 9-ம் தேதி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், வரும் தீபாவளிக்கு இன்னொரு படத்தை கொடுத்து விட வேண்டும் என்பதி குறியாக இருக்கிறார் நடிகர் விஜய்.
இதனால், தளபதி65 படத்தின் படப்பிடிப்பு மாஸ்டர் படத்தின் ரிலீசுக்கு முன்பே தொடங்கி விடும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த படத்தை இயக்கவுள்ள இயக்குனர்கள் பட்டியலில் இயக்குனர் சிவா, அருண்ராஜா, பாண்டிராஜ், அட்லீ என பல இயக்குனர்களின் பெயர்கள் கிசுகிசுக்கப்பட்டது.
ஆனால், தற்போது தளபதி65 படத்தை இயக்கும் வாய்பை இயக்குனர் சுதா கொங்கரா தட்டி சென்றுள்ளார். இவர் கூறிய கதை பிடித்ததால் உடனடியாக ஓகே சொல்லிவிட்டாராம் விஜய்.
சூரரை போற்று படத்தை போட்டு காட்டும்படி விஜய் கேட்டிருக்கிறார், அவர் போட்டு காட்டிய பிறகு தான் விஜய் சுதா கொங்கராவுடன் கூட்டணியை உடனே உறுதிசெய்துவிட்டாராம் விஜய். மார்ச் மாதம் இறுதியிலேயே தளபதி65 படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Tags
Thalapathy 65