அந்த ஹீரோவுக்கு வெண்ணெய் - இந்த ஹீரோவுக்கு சுண்ணாம்பா..? - சின்ன நம்பர் நடிகையால் கிடப்பில் கிடக்கும் படம்..!


தமிழ் சினிமாவில் பெரிய நம்பர் நடிகையும், சின்ன நம்பர் நடிகையும் செய்யும் சேட்டைக்கு அளவே இல்லாமல் போய்க்கொண்டிருகின்றது. இவர்கள் மட்டும் தான் நடிகைகள் என்ற ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்து வருகிறார்கள்.

பெரிய நம்பர் நடிகையை விடுங்க. இப்போது, சின்ன நம்பர் நடிகை செய்யும் அட்டகாசம் தான் பாம்பும் ஏணியும் உள்ள விளையாட்டு படத்தின் தலைவலிக்கு காரணமாக அமைந்துள்ளது.

படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி வச்சி இருக்கோம் வாங்க என்று அழைத்தால் நான் அங்க இருக்கேன், இங்க இருக்கேன் என்று தொடர்ந்து கடுப்பேற்றி வருகிறாராம். இந்த படம் அவர் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த அந்த வருட படத்திற்கு முன்பே எடுக்கப்பட்ட படம்.

இன்னும் ரிலீஸ் ஆகாமல் பொட்டியில் தூங்குகின்றது. படத்தின் மீது எந்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இல்லை.நிலைமை இப்படியிருக்க ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு அழைத்தால் படக்குழுவை அழைக்கழிக்கும் சின்ன நம்பர் நடிகைக்கு எதிராக தயாரிப்பாளர் கவுன்சிலுக்கு செல்ல படக்குழு உத்தேசித்துள்ளது என்கிறார்கள்.

பெரிய நம்பர் நடிகர் பெரிய ஹீரோ, சின்ன ஹீரோ என்ற பாகுபாடு இல்லாமல் எந்த படத்தின் ப்ரமொஷனுகும் செல்வதில்லை. ஆனால், சின்ன நம்பர் நடிகை பெரிய ஹீரோ படங்கள் என்றால் பிரமோஷனுக்கு செல்கிறார். சின்ன ஹீரோ படங்களின் ப்ரமோஷனுக்கு வருவதில்லை. பெரிய ஹீரோன்னா வெண்ணை, சின்ன ஹீரோனா சுண்ணாம்பா என கேள்வி எழுப்புகிறார்கள் படக்குழு.

அந்த ஹீரோவுக்கு வெண்ணெய் - இந்த ஹீரோவுக்கு சுண்ணாம்பா..? - சின்ன நம்பர் நடிகையால் கிடப்பில் கிடக்கும் படம்..! அந்த ஹீரோவுக்கு வெண்ணெய் - இந்த ஹீரோவுக்கு சுண்ணாம்பா..? - சின்ன நம்பர் நடிகையால் கிடப்பில் கிடக்கும் படம்..! Reviewed by Tamizhakam on February 20, 2020 Rating: 5
Powered by Blogger.