பிரபல காமெடி நடிகர் உடல் உறுப்பு செயல் இழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதி - ரசிகர்கள் அதிர்ச்சி..!


காமெடிக்கான முக்கிய தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வந்தவர் லோகேஷ் பாப். சின்னத்திரை மற்றும் சினிமா ரசிகர்கள் இவரை பலருக்கும் தெரிந்திருக்கும். 

நயன்தாரா, விஜய் சேதுபதி நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடி தான் படத்தில் இவர் சிறு வேடத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் அவருக்கு திடீரென பக்கவாதம் ஏற்பட்டு இடது கை மற்றும் இடது கால் செயலிழந்து விட்டது. 

இதனை தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு சிகிச்சையளிக்க ரூ 7 லட்சம் வரை பணம் தேவைப்படுகிறதாம். 

இதனால் பலரின் ஆதரவையும் உதவியையும் நாடியுள்ளார் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி தொகுப்பாளர் திருச்சி சரவணக்குமார். இதற்காக அவர் ஃபேஸ்புக் மூலம் உதவி கேட்டுள்ளார்.