நடிகை சனாகான், தமிழில் ‘சிலம்பாட்டம்’, ‘தம்பிக்கு இந்த ஊரு’, ‘பயணம்’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். கோலிவுட்டில் வாய்ப்புகள் இல்லாததால் பாலிவுட்டிற்கு சென்றார்.
அங்கும் எதிர்பார்த்த அளவு இல்லை. இந்நிலையில் நடிகர் சல்மான் கானின் நட்பு கிடைத்து. அவருடன் நெருங்கி பழகி வந்தார். அந்த நெருக்கத்தின் காரணமாக சல்மான்கான் தான் நடத்தும் நிகழ்ச்சி ஒன்றில் சனா கானுக்கு வாய்ப்பு கொடுத்தார்.
மேலும் தனது படத்திலும் வாய்ப்பு தந்தார். ஆனாலும் சனாவுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வரவில்லை. இதற்கிடையில் தனது தம்பியுடன் சேர்ந்து இளம் பெண்ணை கடத்தியதாக சனா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் சில காலம் தலைமறைவாக இருந்தார்.
கடந்த சிலநாட்களுக்கு முன்பு தன்னுடைய காதலனை பிரிவதாக அறிவித்தார். அவர் என்னை தவறாக பயன்படுத்துகிறார் என்றும். என் கண் முன்னே பல பெண்களுடன் தொடர்பில் இருக்கிறார். பலரும் சொல்லி நான் நம்பவில்லை. நேரில் பார்த்த பிறகு தான் இந்த முடிவுக்கு வந்தேன் என்று கூறி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தார்.
தற்போது, ப்ரா அணியாமல் கவர்ச்சியான போட்டோ செஷன் நடத்தி அதில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணைய தளத்தில் தவழ விட்டதுடன் இயக்குனர்களுக்கும் தனிப்பட்ட முறையில் அனுப்பி வாய்ப்பு தேடி வருகிறார் சனாகான்.



