பிரபல நடிகை அமலா பால் ஆடை படத்திலும், ஸ்ருஷ்டி டாங்கே ராஜாவுக்கு செக் படத்திலும் அரை நிர்வாணமாக நடித்து கோலிவுட்டில் பரபரப்பை கொடுத்தனர்.
அந்த வரிசையில் தற்போது பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் "பொல்லாத உலகின் பயங்கர கேம்" (Pollatha Ulagin Bayangara Game) அதாவது, PUB-G என்ற படத்தில் நடித்து வருகிறார்.
பப்ஜி விளையாட்டை மையமாக வைத்து காமெடி பிளஸ் திரில்லர் கதையம்சத்துடன் படம் உருவாகி வருகிறது. இந்த கதைக்கு ஒரு காட்சியில் அவசியம் தேவைப்பட்டதால் ஒட்டு துணியின்றி முழு நிர்வாணமாக நடித்துள்ளராம் ஐஸ்வர்யா தத்தா.
இதற்கான ஷூட்டிங் சில தினங்களுக்கு முன்னர் நடந்து முடிந்துள்ளது. முன்னதாக, இவர் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்ட போதே ஓரினச்சேர்கையாளராக ஒரு படத்தில் நடித்து சக நடிகைக்கு லிப்-லாக் முத்தம் எல்லாம் கொடுத்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலானது குறிப்பிடதக்கது.


