சினிமாவை பொறுத்தவரை நடிகைகள் ஓரளவு பெயர் கிடைக்கும் வரை எந்தவிதமான கதாபாத்திரங்களிலும் நடிக்க தயாராக இருப்பார்கள். குட்டி குட்டியான உடைகளில் கவர்ச்சி காட்டுவது, படுக்கையறை காட்சிகள், முத்தக்காட்சிகள் என அத்தனையிலும் புகுந்து விளையாடுவார்கள்.
ஆனால், கொஞ்சம் பிரபலம் ஆகி விட்டால் போதும் அதை பண்ணமாட்டேன். இதை பண்ண மாட்டேன் எனவும் அது எல்லாம் தவறு என்று கூறுவது காலம் காலமாக நடந்து வரும் சம்பிரதாயமாக உள்ளது.
தற்போது தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வருபவர் ராஷி கண்ணா. இவருக்கு இரண்டு மொழிகளிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் ராசி கண்ணா நடிப்பில் வெளிவந்த வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் படம் மண்ணைக் கவ்வியது.
அதற்கு இயக்குனரிடம் விஜய் தேவாரகொண்டா சண்டை போட்டதுதான் காரணம் எனவும் பல காரணங்கள் எழுந்தவண்ணம் உள்ளன.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ராஷி கண்ணா, இனி எல்லை மீறிய கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன் என திட்டவட்டமாக கூறியிருந்தார்.
இந்நிலையில், தற்போது மிதமான கவர்ச்சி உடையில் இளசுகளின் கவனத்தை ஈர்க்கும் பார்வையை வீசி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இணையத்தில் வைரலாகிவரும் அந்த புகைப்படங்கள் இதோ,





