என்னை அவர் மூலமாக படுக்கைக்கு அழைக்கிறார்கள் - நான் சீரியலுக்கு போய்விடுகிறேன் - வாணி போஜனுக்கு நடந்த கொடுமை.!


விகடன் டெலிவிஸ்டா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியலை பார்க்காதவர்கள் இருக்க கிடையாது. 

அதில், ஹீரோயினாக நடித்த வாணி போஜன் தற்போது சினிமாவில் நடிக்க வந்த்திருக்கிறார். ஓ மை கடவுளே என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால் சில படங்களில் நடிக்கப் பேச்சு நடந்தது. ஓ மை கடவுளே படம் கலவையான விமர்சனங்கள் பெற்றாலும் வாணிபோஜன் தனது பெயரைத் தக்க வைத்துக் கொண்டார். சினிமா துறையில் மீ டூ விவகாரம் பெரிதாகப் பேசப்படுகிறது. 

அதுபோல் சம்பவத்தை வாணி போஜன் எதிர்கொண்டிருக்கிறாரா என்று கேட்டபோது பதில் அளித்தார். அவர் கூறும்போது, 'சினிமாவில் மீ டூ விவகாரம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்கு நேரடியாக அப்படி நடந்ததா என்றால் இல்லை. 

ஆனால், என் மேனேஜரிடம் அட்ஜெஸ்ட் செய்வாரா..? என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு, என்னுடைய மேனேஜரே பதில் தந்து விட்டார். அட்ஜெஸ்ட் பண்ண வேண்டும் என்ற நிலை வந்தால் மீண்டும் நான் டிவிக்கே போய் விடுவேன் 'என்றும் இது போன்ற சூழ்நிலை சினிமாவில் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் எனவும் வாணி போஜன் கூறியுள்ளார்.