ஹை-டெக்காக உருவாகும் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் - ஓ.கே சொன்ன விஜய் - பட்ஜெட் மட்டும் எவ்வளவு தெரியுமா..?


நடிகர் விஜய் தற்போது மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு டப்பிங் பணிகளில் இருக்கிறார். இந்நிலையில், தளபதி 65 குறித்த தகவல்கள் இணையத்தில் வட்டமிட்டுக்கொண்டிருக்கின்றன.

அதில், இயக்குனர் சுதா கொங்கரா விஜய்யை இருக்கிறார் என்பது பரவலாக பேசப்பட்டது. ஆனால், மீண்டும் லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி வைக்கிறார் எனவும் "கைதி" படத்தை தயாரித்த ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் இதனை தயாரிக்கிறது என்ற தகவலும் வந்துள்ளது.

இதில் எந்த தகவலும் உறுதிப்படுத்தப்படாத நிலையில் தற்போது ரசிகர்கள் மூக்கின் மேல் கை வைக்கும் வண்ணம் ஒரு தகவல் வந்துள்ளது.

பிரமாண்ட பட்ஜெட்

இந்த படம் பிரமாண்டபொருட்செலவில் தயாராகவுள்ளது. ஆம், 250 கோடி பட்ஜெட்டில் விஜய் நடிப்பில் வெளியான ஹிட் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகவுள்ள இந்த படம் ஹை-டெக்காக உருவாகவுள்ளது என்று கூறுகிறார்கள்.

 

முருகதாஸ்

இந்த படத்தை இயக்குனர் முருகதாஸ் இயக்கவுள்ளதாகவும், இதற்க்கான கதையை விஜயிடம் ஏற்கனவே கூறி சம்மதமும் வாங்கி விட்டார் என்று கூறுகிறார்கள். 

 

துப்பாக்கி 2

ஆம், விஜய் நடிப்பில் வெளியாகி ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த "துப்பாக்கி" படத்தின் இரண்டாம் பாகமாக தான் இந்த படம் வெளியாகவுள்ளது. விஜயின் சினிமா வரலாற்றில் முதன் முறையாக 100 கோடி வசூலை செய்து, நடிகர் விஜய்யை 100 Crores Club-ற்குள் இழுத்து சென்றது இந்த படம்.

 

இன்னும் இளமையாக விஜய்

நடிகர் விஜய் நாற்பது வயது கடந்தவராக இருந்தாலும் இன்னும் இளைமையாகவே இருக்கிறார். இந்த படத்தில் நடிகர் விஜய் இன்னும் இளைமையாக நடிக்கவுள்ளார் என்று கூறுகிறார்கள்.