கடந்த 2013ஆம் ஆண்டு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விஜய் மற்றும் அமலா பால் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் தலைவா. இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது இயக்குனர் விஜய்க்கும், நடிகை அமலா பாலுக்கும் இடையே காதல் மலர்ந்தது.
உடனடியாக இருவரும் திருமணமும் செய்துக்கொண்டனர். ஆனால், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட 2017ஆம் ஆண்டு விவாகரத்து செய்துக்கொண்டனர்.
விவகாரத்திற்கு பின்பு ஏ.எல். விஜய் படம் இயக்கத்திலும் அமலா பால் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வந்தனர். கடந்த வருடம் சொந்தக்காரர்களுக்கு மத்தியில் ஏ.எல்.விஜய் திருமணம் செய்துக்கொண்டார்.
இதன்பின் அமலாபால் மும்பையைச் சேர்ந்த பாடகர் ஒருவர் மீது காதலில் இருக்கிறார் என்று தகவல் பரவியது. ஆனால், அமலாபால் அதுகுறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த பாடகர் பாவ்னிந்தர் சிங் தனது இன்ஸ்டாவில் அமாலாபாலுடன் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டார். ஆனால், புகைப்படங்களை வெளியிட்ட சில மணித்துளிகளில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டார்.
இந்நிலையில், சர்ச்சைக்கு பேர் போன நடிகை ஸ்ரீ ரெட்டி அமலா பாலுக்கு ஆறுதல் சொல்லும் படி ஒரு பதிவை பதிவு செய்துள்ளார். அதன் படி, " கவலை படாதிங்க அமலாபால், உங்களுடைய பஞ்சாபி கணவர் உங்களை நன்றாக பார்த்துக்கொள்ளவார். பஞ்சாபிகளை நான் நம்புகிறேன்" என கூறியுள்ளார்.

