நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனி தமிழ் சினிமாவில் கருத்துகளை வாரி விசும் கருத்து கந்தசாமி ஆவர். இவரது அறிவுரைக்களுக்காக பலர் ரசிகர்களாக இருக்கின்றனர்.
ஆனால், அதே அறிவுரைகள்தான் இவரை தற்போது அதே ரசிகர்களிடம் இருந்து தூரத்தில் தள்ளி வைத்திருக்கிறது. ஆனால், இந்த அளவுக்கு வைத்து செய்வார்கள் என நிச்சயமாக யாரும் எதிர்பார்க்கவில்லை.
அந்த அளவுக்கு வச்சு செய்து வருகிறார்கள். அவரை கேலி செய்வதற்கு பெரிதாக எந்த காரணமும் இல்லை வெறும் டைம் பாஸ் என பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், உண்மையான காரணம், சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான நாடோடிகள் 2 படத்தில் தன்னுடைய தனிப்பட்ட அரசியல் விறுப்பு, வெறுப்புகளை வம்படியாக திணித்தது தான். படம் ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருக்க இவரது அரசியல் விருப்பங்கள் ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருகின்றது.
இந்நிலையில், கொரோனா அச்சத்தில் இருக்கும் மக்களுக்கு சமுத்திரகனியின் வசங்கனங்கள் மூலம் விழிப்புணர்வு செய்கிறேன் என்று கிளம்பிய சில அரைகுறை மீம்ஸ் கிரியேட்டர்கள் தான் சமுத்திரகனியின் இந்த பரிதாப நிலைக்கு காரணமாகி விட்டது.
படத்தில் கருத்து சொன்னது பத்தாது என , இப்போது கொரோனாவுக்குமா..? என்று கொல வெறியான ரசிகர்கள் மற்றும் மீம் கிரியேட்டர்கள் இவரின் பெயரை பயன்படுத்தி மீம் ரெடி செய்து மகிழ்ந்து வருகின்றனர்.
சமுத்திர மினி😂😂😂#Pray_For_samuthirakani pic.twitter.com/M9s3NQs8fj— கார்த்திக் 𖤍 (@ItzHrithik3) March 30, 2020





