நடிகை ஹன்சிகா மோத்வானி, கர்நாடக மாநிலம் மங்களூருவில் பிறந்தவர். இவரின் தந்தை மோத்வானி தொழில் அதிபர். எஸ்கேப் ப்ரம் தாலிபான் என்ற இந்தி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.
தனுஷ் படமான ‘மாப்பிள்ளை’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். முதல் படம் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் ஜெயம் ரவியுடன் எங்கேயும் காதல், விஜய்யுடன் வேலாயுதம் மற்றும் உதய நிதி ஸ்டாலினுடன் ஒருகல் ஒரு கண்ணாடி படங்கள் மூலம் முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.
மனிதன், போகன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இந்த படங்களும் ஹன்சிகாவுக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்த படங்களாகும். கர்நாடக நடிகர் புனித் ராஜ்குமாருடன் பிந்தாஸ் என்ற படத்தில் நடித்தார்.
ஒரு காலத்தில் முன்னணி ஹீரோயினாக பீக்கில் இருந்தவர் ஹன்ஷிகா. ஆனால், இப்போது அவரது நிலைமை மிகவும் மோசம்.சொல்லிக்கொள்ளும் படி பட வாய்ப்புகள் எதுவும் இவரிடம் இப்போது இல்லை.
இந்நிலையில், மாலத்தீவு சுற்றுலா சென்றுள்ள அவர் அங்கு கடற்கரை ஒன்றில் பிகினி உடையில் மல்லாக்க படுத்துக்கொண்டு காலை தூக்கியபடி போஸ் கொடுத்து "என்னுடைய தினசரி மருந்தான வைட்டமின் Sea-ஐ எடுத்துக்கொண்டிருக்கிறேன்" என கூறியுள்ளார்.
