விஜய்யின் ஹிட் படத்தில் நடித்த சிறுவன் 17 ஆண்டுகளுக்கு பிறகு மாஸ்டர் படத்தில் எப்படி இருக்கார் பாருங்க...!


நடிகர் விஜய்க்கு அவருடைய சினிமா வரலாற்றில் மறக்கமுடியாத மற்றும் திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் "திருமலை". நடிகை ஜோதிகா விஜய்க்கு ஜோடியாக நடித்த இந்த படம் கடந்த 2003-ம் ஆண்டு ரிலீஸ் ஆனது. 

இந்த படம் ரிலீஸ் ஆகி 17 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த படத்தில் பைக் மெக்கானிக்காக வரும் விஜய்க்கு எடுபிடியாக சிறுவன் உதய் ராஜ் இப்போது மீண்டும் விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். 

இதனை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, ஹாய் ஆல்.. இது நான் உதய்.. என்னுடைய அதிகரப்பூர்வ பக்கம். 17 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் விஜய் அண்ணாவுடன் இணைந்து நடித்திருக்கிறேன். 

திருமலை படத்தில் நடித்தேன், தற்போது மாஸ்டரில் நடித்திருக்கிறேன். என்னுடைய இயக்குநர் மற்றும் சகோதரரான லோகேஷ் கனகராஜ்க்கு பெரிய நன்றி என பதிவிட்டுள்ளார். 


மேலும், நாட்டாமை உட்பட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமான மகேந்திரனும் மகேந்திரனும் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் ஹிட் படத்தில் நடித்த சிறுவன் 17 ஆண்டுகளுக்கு பிறகு மாஸ்டர் படத்தில் எப்படி இருக்கார் பாருங்க...! விஜய்யின் ஹிட் படத்தில் நடித்த சிறுவன் 17 ஆண்டுகளுக்கு பிறகு மாஸ்டர் படத்தில் எப்படி இருக்கார் பாருங்க...! Reviewed by Tamizhakam on April 17, 2020 Rating: 5
Powered by Blogger.