"பார்க்க சகிக்கல - தயவுசெஞ்சு கழட்டிடுங்க.." - கண்ட இடத்தில் அதை மாட்டிய பிக்பாஸ் நடிகை - கெஞ்சும் ரசிகர்கள்.!


பிக்பாஸ் மூலமாக தமிழ் ரசிகர்கள் இடையே மிகவும் பிரபலமானவர் ரைசா வில்சன். இதே நிகழ்ச்சியில் கலந்து ஹரிஸ் கல்யாண் உடன் நட்புடன் பழகி வந்தார்.பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஹரிஸ் கல்யாண் - ரைசா இணைந்து பியர் பிரேமா காதல் படத்தில் நடித்தனர். 

இந்த படமும் வெற்றியடைந்தது. இதன் பின் ஹரிஸ் கல்யாண் உடன் டேட்டிங் செய்து வருவதாக கூறி இருந்தார்.விளம்பரத்திலும், சினிமாவில் சின்ன சின்ன வேடங்களிலும் நடித்து வந்த ரைசா வில்சன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் திடீர் பிரபலம் ஆனார்.

இந்நிலையில், அலிசா, காதலிக்க யாருமில்லை, எப்.ஐ.ஆர் போன்ற படங்களில் நடிப்பதாக செய்திகள் வந்தது. அதன் பிறகு அதை பற்றிய தகவல்கள் இல்லை. 


பிக்பாஸ் புகழ், ஒரு ஹிட் படம் இரண்டும் தன்னை எங்கேயோ தூக்கி நிறுத்தி விடும் என்று நினைத்தவருக்கு இது ஏமாற்றமாக அமைந்தது. இதனால் தற்போது அடுத்த கட்டத்திற்கு வந்திருக்கிறார். 


தன்னுடைய கவர்ச்சி படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வரும் இவர் இப்போது கண் புருவத்தில் கடுக்கன் மாட்டிக்கொண்டிருப்பது புகைப்படத்தை வெளியிட்ட, அதனை பார்த்த ரசிகர்கள் "பார்க்க சகிக்கல தயவு செஞ்சு கழட்டிடுங்க.." என்று கலாய் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.

"பார்க்க சகிக்கல - தயவுசெஞ்சு கழட்டிடுங்க.." - கண்ட இடத்தில் அதை மாட்டிய பிக்பாஸ் நடிகை - கெஞ்சும் ரசிகர்கள்.! "பார்க்க சகிக்கல - தயவுசெஞ்சு கழட்டிடுங்க.." - கண்ட இடத்தில் அதை மாட்டிய பிக்பாஸ் நடிகை - கெஞ்சும் ரசிகர்கள்.! Reviewed by Tamizhakam on April 23, 2020 Rating: 5
Powered by Blogger.