ச்சீ.. கருமம்.. பொதுவெளியில் கண்றாவி.. கண்ணிமைக்கு நொடியில் அரங்கேறிய காது கூசும் அசிங்கம்.. வைரல் வீடியோ..

இணையத்தில் தற்போது ஒரு வீடியோ தொடர்ந்து பரவி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் லுங்கி அணிந்து, சட்டை அணிந்துகொண்டு ஒரு காத்திருப்பு பகுதியில் அங்கும் இங்கும் நடந்து திரிகிறார்.

அங்கு இருக்கும் பெண்கள் ஏதாவது பொருளை எடுக்க குனியும் போதோ அல்லது கவனம் சிதறிய நிலையில் இருக்கும் போதோ, அந்த நபர் அவர்களைக் கவனித்து வேண்டுமென்றே பின்னால் சென்று இடித்து விடுகிறார். உடனே தெரியாமல் நடந்ததாக நடித்து, மன்னிப்பு கேட்டுக்கொண்டு அங்கிருந்து விலகிச் செல்கிறார்.

இந்த நபரின் நடவடிக்கையை சந்தேகப்பட்ட அங்கிருந்த ஒரு நபர், தனது கைபேசியில் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி லட்சக்கணக்கானோர் பார்த்து வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அந்த நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

English Summary : A video circulating online shows a man around 50 years old wearing lungi and shirt in a public waiting area. He moves near women when they bend or appear distracted, makes contact and then apologizes as if it happened unintentionally before moving away. A bystander secretly recorded the scenes on his phone. The clip has gone viral and the man is reported to be arrested for further inquiry.