ஒரே ஒரு "மீம்" - நடுத்தெருவுக்கு வந்த குடும்பம் - தூக்கி அடித்த முன்னணி செய்தி சேனல்..! - கொடுமை..!


சமகாலத்தில் பலரும் செய்தி சேனல்களை பார்த்து தெரிந்து கொள்ளும் விஷயங்களை விட சமூக வலைதளங்களில் வைரலாகும் மீம்களை பார்த்து தான் அதிக விஷயங்களை தெரிந்துகொள்கிறார்கள்.

நகைச்சுவை நடையில் ஒரு செய்தியை கூறினால அது ரசிக்கும் படியாகவே இருக்கும். அந்த வகையில், VIP-க்கள் பலரும் மீம்ஸ் கிரியேட்டர்களாக வேலை பார்த்து தங்களது பொழுதை போக்கிக்கொண்டு பிறரையும் மகிழ்வித்து வருகிறார்கள்.

கொடுமை என்னவென்றால் நம்மை குபீர் என்று சிரிக்க வைக்க அந்த மீம் கிரியேட்ட்டரின் முகம் எப்படி இருக்கும் என்று கூட நமக்கு தெரியாது.  சமூக வலைதளங்கள் தாண்டி தொலைக்காட்சி, செய்திதாள் வரை சில மீம்கள் வளர்ந்து செல்கின்றன.

தொலைகாட்சிகளில், மீம்களுக்கென தனியாக ஸ்லாட் ஒதுக்கு ஒளிபரப்பு செய்யும் அளவுக்கு நம்ம ஊரு மீம் கிரியேட்டர்கள் தங்கள் திறமையை காட்டுகிறார்கள். 

அப்படித்தான் அந்த முன்னணி செய்தி சேனல் ஒன்று மீம்களுக்காகவே ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி மீம்களை ஒளிபரப்பு செய்து வருகின்றது. ஆனால், இதில் என்ன ப்யூட்டி என்றால், வைரலாகும் மீம்களை ஒளிபரப்பு செய்ய மாட்டார்கள்.

மாறாக, தற்போது ஆளும் கட்சிக்கு எதிராகவும், முதலமைச்சரை கிண்டலடிக்கும் வகையிலும் இருக்கும் மீம்களை மட்டும் பொருக்கி எடுத்து ஒளிபரப்பி வந்தார்கள்.

ஆனால், கடவுள் இருக்கான் குமாரு என்பதை நிருபிக்கும் வகையில் அந்த செய்தி நிறுவனம் சார்ந்த அரசியல் கட்சியின் தலைவரையே கிண்டலடிக்கும் விதமான மீம்-ஐ முதலமைச்சரை கிண்டலடிக்கும் மீம் என நினைத்துக்கொண்டு தவறுதலாக நேற்று ஒளிபரப்பு செய்துவிட்டார்கள்.

இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால், அந்த அரசியல் கட்சியின் தலைமையில் இருந்து அழுத்தம் வரவே தற்போது அந்த மீம்-ஐ ஒளிபரப்பு செய்த எஞ்சினியர், எடிட்டர் உட்பட சிலரை வேலையை விட்டே தூக்கிவிட்டதாம் அந்த செய்தி நிறுவனம். 

இப்போது, வேலையை விட்டு நீக்கப்பட்ட அவர்களது குடும்பத்தின் நிலை நடுத்தெருவுக்கு வந்துவிட்டது அவர்களுக்கு என்ன பதில்..? என்ன நீதி..? இது தான் ஊடக தர்மமா..? என்று சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

--- Advertisement ---