விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிரபல நிகழ்ச்சியான கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளியாக அறிமுகமானவர் 'ஜாக்குலின்'. பல சின்னத்திரை ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தார்.
நயன்தாரா நடிப்பில் வெளியான "கோலமாவு கோகிலா" படத்தில், நயன்தாராவுக்கு தங்கையாக நடித்திருந்தார். இந்த படத்தை தொடந்து நல்ல கதைகள் வந்தால் மட்டுமே நடிப்பேன் என பேட்டி ஒன்றில் கூறி இருந்தார்.
இந்நிலையில், தொடர்ந்து பட வாய்ப்புகள் வராத நிலையில் தற்போது மீண்டும் சின்னத்திரை பக்கமே திரும்பியுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் 'தேன்மொழி பி.ஏ' என்ற சீரியலில் ஜாக்குலின் ஹீரோயினாக நடிக்கிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு என்னுடைய பக்கத்துக்கு வீட்டுக்காரர் என்னுடைய மதத்தை குறிப்பிட்டு திட்டினார் எனவும் அவர்வீட்டுகேட்டின் முன்பு நாய்க்கு சாப்பாடு வைத்ததால் தான் என்னை திட்டினார் என்னுடைய தவறு தான். ஆனால், என்னுடைய மதத்தை குறிப்பிட்டு திட்டியது எனக்கு மிகவும் வருத்தமாக போய்விட்டது என்று வேதனையுடன் கூறியிருந்தார்.
இந்நிலையில், சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் வயலின் ஓரம் உள்ள பம்ப் செட் தொட்டியில் புடவையுடன் குழிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு "குளிச்சிட்டு இருக்கோம்" என கூறியுள்ளார்.
இதோ அந்த வீடியோ,



