இதுவரை இல்லாத கவர்ச்சியில் நடிகை வாணி போஜன்..! - ரசிகர்கள் ஷாக்..!


விமான பணிப்பெண்ணாக இருந்து, மாடலிங், விளம்பர படங்கள் என ஆரம்பித்து  சின்னத்திரை ஹீரோயின் ஆனவர் நடிகை வாணி போஜன். சின்னத்திரை நயன்தாரா என்று இவரை ப்ரொமோட் செய்து அப்படியே வெள்ளித்திரைக்கு கூட்டி வந்து விட்டது காலம்.

அண்மையில் தெலுங்கு படமான ‘மீக்கு மாத்ரமே செப்தா’ படத்தில் அறிமுகமாகி டோலிவுட்டின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் வெளியான படம் அது.மேலும், ஓ மை கடவுளே படத்தில் மீரா அக்காவாக தமிழில் A க்ளாஸ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இதைத் தொடர்ந்து தமிழிலும் வெள்ளித்திரை வாய்ப்புகள் கதவைத் தட்டுவதாக பூரித்துச் சொல்கிறார் வாணி போஜன்.இந்நிலையில், தற்போது வெப் சீரிஸ் ஒன்றில் ஹீரோயினாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சினிமாவுக்கு நிகரான பட்ஜெட்டில் உருவாகி வரும் வெப் சீரிஸ்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. தொலைக்காட்சி தொடர்கள் இல்லத்தரசிகளை கட்டிப்போடுகின்றன. வெப் சீரிஸ்கள் இணைய வாசிகளை கட்டிப்போட தொடங்கியுள்ளன.

இயக்குனர் முருகதாஸ் தயாரிக்கவுள்ள இந்த வெப் சீரிஸை முருகதாஸின் உதவி இயக்குனர் ஒருவரே இயக்கவுள்ளதாக கூறுகிறார்கள். மேலும், இந்த வெப் சீரிஸில் இதுவரை இல்லாத வகையில் சில காட்சிகளில் கவர்ச்சி காட்டி நடிக்கவுள்ளார் வாணி போஜன் என்றும் கூறுகிறார்கள்.

வாணி போஜனுக்கு என இருக்கும் ரசிகர்கள் இந்த வெப் சீரிஸை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.