ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான `பேட்ட' படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக தமிழ் பட உலகுக்கு அறிமுகமானவர், மாளவிகா மோகனன். இப்போது `மாஸ்டர்' படத்தில் விஜய் ஜோடியாக நடித்துள்ளார்.
தொடர்ந்து தமிழ் பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. மாளவிகா மோகனனுக்கு தமிழ் தெரியாது. அதனால், `டியூசன்' மூலம் தமிழ் கற்றுக்கொள்ள முடிவு செய்தார்.
அதன்படி, முன்னாள் செய்தி நிருபராக இருந்த ஒரு பெண்ணை தனது தமிழ் ஆசிரியையாக மாளவிகா மோகனன் நியமித்து இருக்கிறார். அவர் எங்கே சென்றாலும், அந்த ஆசிரியையை உடன் அழைத்து செல்கிறார்.
இது ஒரு பக்கம் இருக்க தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அம்மணி. அந்த வகையில், தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், "அந்த கண்ண பாத்தாக்கா.. லவ்வு தானா தோனாதா.." என்று மாஸ்டர் பட பாடல் வரிகளை கொண்டு அவருடைய கண்களை வர்ணித்து வருகிறார்கள்.
Tags
Malavika Mohanan