நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர். இவரின் திரைப்படங்கள் வருடம் தோறும் மிக பிரம்மாண்டமாக வெளியாகும். அந்த வகையில் சென்ற வருடம் இவர் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம், மிக பெரிய வசூல் சாதனை புரிந்தது.
இந்நேரம், இவர் நடிப்பில் உருவான மாஸ்டர் படம் வெளியாகியிருக்க வேண்டியது. ஆனால், இந்த கொரோனா நோய் தாக்கத்தால் ஊரடங்கு மற்றும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ள காரணத்தினால் ரிலீஸ் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுவரை நம்மில் பலரும் பார்த்திராத நடிகர் விஜய்யின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. ஆம், இவர் நடிப்பில் கடந்த 2014ல் வெளியான கத்தி திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை காசி திரையரங்கில் ரசிகர்களுடன் பார்த்துள்ளார்.
மேலும், அடையாளம் தெரியாத வகையில் முகத்தில் முகமூடி அணிந்த படி சென்றுள்ளார்.
Tags
Actor Vijay