"46 வயசாகியும் ஏன் திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாக இருக்கிறேன்..?" - பிரபல நடிகை கூறிய பதிலை பாருங்க..!


பொதுவாக சினிமா நடிகைகள் என்றாலே வாய்ப்பு வரும் சினிமாவில் நடிப்பதும் மார்கெட் டல்லானதும் பெரிய தொழிலதிபர் யாரையாவது திருமணம் செய்து செட்டில் ஆவது ஆண்டு ஆண்டு காலமாக நடந்து வரும் ஒரு சம்பிரதாயம்.

பல நடிகைகள் திருமணம் செய்து கொண்டு ஆள் எங்கே போனார்கள் என்று கூட தெரியாமல் காணாமல் போய்விடுவார்கள். ஆனால், சில நடிகைகள் விவாகரத்து, சண்டை, சச்சரவு என மீண்டும் மீடியாவில் அடிபடுவார்கள்.

ஆனால், 46 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் பிரபல நடிகை சித்தாராவிடம், ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கேட்டதற்கு அவர் கொடுத்த பதில் ஆச்சரியமாக இருந்தது. 

இஇயக்குனர் கே.பாலசந்தர் இயக்கிய ‘புதுப் புது அர்த்தங்கள்’ படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் மலையாள நடிகை, சித்தாரா. முதல் படமே ஹிட்டானதால் தமிழில் அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்தன, புது வசந்தம், புரியாத புதிர், படையப்பா என பல படங்கள் நடித்தார்.

தமிழ் தவிர கன்னடம், தெலுங்கு படங்களிலும் நடித்து வந்தார், இவருக்கு தற்போது வயது 46. தொடர்ந்து அம்மா, அண்ணி கதாபாத்திரங்களில் சித்தாரா நடித்து வருகிறார், ஆனால் அவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், திருமணம் வேண்டாம் என்ற முடிவை நான்தான் எடுத்தேன். அதற்கு காரணம் என் வாழ்க்கையில் நான் முக்கிய நபரை இழந்துவிட்டேன், அவர் என்னுடைய தந்தை.அதனால் திருமணம் பற்றி நான் சிந்திக்கவேயில்லை, நம்முடைய வாழ்வில் அடுத்து என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என தெரிவித்துள்ளார்.

"46 வயசாகியும் ஏன் திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாக இருக்கிறேன்..?" - பிரபல நடிகை கூறிய பதிலை பாருங்க..! "46 வயசாகியும் ஏன் திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாக இருக்கிறேன்..?" - பிரபல நடிகை கூறிய பதிலை பாருங்க..! Reviewed by Tamizhakam on May 09, 2020 Rating: 5
Powered by Blogger.