இது நான் தான் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா..? - பிக்பாஸ் ரைசா வெளியிட்ட புகைப்படம் - ரசிகர்கள் ஷாக்..!


பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்ற மாடல் அழகி ரைசா வில்சன், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு, பிறகு நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல் படத்தில் நாயகியாக அறிமுகமானார்.

தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை ரைசா வில்சன், மாடல் அழகியாக வலம் வந்த ரைசா வில்சன், கமல்ஹாசன் தொகுத்து வழங்கி தமிழில் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டார். 

பிக்பாஸ் முதல் சீசனின் போட்டியாளரான ரைசா வில்சன் மற்றும் ஓவியாவை இன்றளவும் பிக்பாஸ் ரசிகர்கள் மறக்காமல் நினைவில் வைத்துள்ளனர். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சி ரைசாவுக்கு மிகப்பெரிய பிளாட்ஃபார்மாக அமைந்தது. 

படத்தின் கதைக்கு தேவைஎன்றால் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சி காட்டி நடிக்க தயார் என்று ஓப்பனாக கூறுகிறார். பிக்பாஸ் நிகழ்சியை மிகச்சரியாக கையாண்டவர் இவர். பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று ஹீரோ, ஹீரோயின் என்ற பெயர் வாங்குவது மட்டுமல்ல ரசிகர்கள் மத்தியில் பெரிய கெட்ட பெயர் எதுவும் இல்லாமல் வெளியே வந்துவிட்டாலே போதும் அவர்களுக்கு சினிமா வாய்ப்புகள் கணிசமான அளவுக்கு வருகின்றன. 

அந்த வகையில், பிக்பாஸ் வீட்டில் நல்ல பெயர் வாங்க வில்லையென்றாலும், எந்த வித கெட்ட பெயரும் வாங்காமல் வெளியே வந்தால் ரைசா. இப்போது, அடுத்ததடுத்து படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். மேலும், சமூக வலைதலங்களிலும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். 

அந்த வகையில், தற்போது தன்னுடைய இளம் வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ள ரைசா " இது நான் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா..?" என்று கேட்டுள்ளார்.
Previous Post Next Post
--Advertisement--