நிஜமாகவே இது வாணி போஜன் தானா..? - கண்ணை கசக்கி பார்க்கும் ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படம்..!
தெய்வமகள், சீரியல் மூலம் சின்னத்திரையில் தன்னுடைய திரை பயணத்தை துவங்கிய ஏர் ஹோஸ்டர்ஸ், வாணி போஜன். தற்போது, இவர் இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகும் வெப் சீரிஸ் ஒன்றில், பிரபல நடிகருக்கு ஜோடியாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இயக்குனர் கார்த்தி சுப்புராஜ், நடிகர் தனுஷை வைத்து இயக்கி வரும், 'ஜகமே தந்திரம்' படத்தில் ஒரு பக்கம் பிசியாக இருந்தாலும், மற்றொரு பக்கம், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் 'குயின்' படத்தின் தயாரிப்பு, மற்றும் வெப் சீரிஸ் தயாரிப்பிலும் முழு கவனம் செலுத்தி வருகிறார்.
அந்த வகையில், தற்போது தன்னுடைய ஸ்டோன் பெஞ்ச் புரொடக்ஷன்ஸ் சார்பாக அவரது உதவி இயக்குநர் சாருகேஷ் சேகர் இயக்கத்தில் வெப் சீரிஸ் ஒன்றை தயாரித்துள்ளார். இந்த வெப் சீரிஸ் 8 எபிசோட்களை கொண்டுள்ளதாகவும், அமேசான் பிரைமில் விரைவில் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சின்னத்திரையில் இருந்து வந்து அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வரும் நடிகை வாணி போஜன் நடிப்பில் ஓ மை கடவுளே திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நடிகை வாணி போஜன் ஆரம்ப காலத்தில் ஒரு விளம்பர படத்தில் நடிக்கும் போது எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள் நிஜமாகவே இது வாணி போஜன் தானா..? என்று ஆச்சரியத்துடன் கண்ணை கசக்கி பார்த்து வருகிறார்கள்.
நிஜமாகவே இது வாணி போஜன் தானா..? - கண்ணை கசக்கி பார்க்கும் ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படம்..!
Reviewed by Tamizhakam
on
May 16, 2020
Rating:
