"இவனுங்கள உயிரோட விட்டா நாட்டுக்கு கேடு.. கொளுத்தி விட்ரனும் அப்படியே.." - திரௌபதி இயக்குனர் ஆதங்கம்..!


வேலூர் பாகாயம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் அந்த மாணவி.. 15 வயது ஆகிறது.. பென்னாத்தூர் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு இப்போதுதான் படித்து முடித்துள்ளார்.

இந்த மாணவியின் வீட்டு பாத்ரூமில் மேற்கூரை இல்லை போலும்.. அதை வீட்டில் உள்ள பெரியவர்களும் சரி செய்ய காணோம்.சில நாட்களுக்கு முன்பு பாத்ரூமில் இவர் குளித்து கொண்டிருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஆகாஷ் என்பவர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

இந்த ஆகாஷூக்கு பூனை கண்ணன் என்று இன்னொரு பட்ட பெயரும் உள்ளதாம். 22 வயசாகிறது.குளிப்பதை வீடியோ எடுக்க போன பூனை கண்ணன், தன்னுடன் பிளஸ்-2 முடித்துள்ள 17 வயது சிறுவர்களையும் அழைத்து சென்றுள்ளார்.

3 பேருமாக சேர்ந்துதான் வீடியோ எடுத்துள்ளனர்.. இது எதுவுமே சிறுமிக்கு தெரியாத நிலையில், ஒருவாள் மாணவியை நேரில் பார்த்து ஆசைக்கு இணங்கும்படி தொல்லை தந்துள்ளனர். வீடியோ எடுத்திருப்பதாகவும் சொன்னார்கள்.

ஆனால் முதலில் இதை மாணவி நம்பவே இல்லை.. அதற்கு பிறகு 3 பேரும் சேர்து வீடியோவை செல்போனுக்கு அனுப்பியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.. அந்த வீடியோவையும் மாணவிக்கு அவர்கள் அனுப்பவில்லை, சொந்தக்காரரின் செல்போனுக்கு அனுப்பி வைத்து, மாணவியை பார்க்க சொல்லி மெசேஜ் தந்துள்ளனர். திடுக்கிட்ட மாணவி உடனடியாக அந்த வீடியோவை டெலிட் செய்தார்.

ஆசைக்கு இணங்கும்படி அவர்கள் கூப்பிட்டு, காட்டுப்பக்கம் ஒதுங்கவும் மனசில்லாமல், வீடியோ இருப்பதையும் ஜீரணிக்க முடியாமல், அவமானத்தில் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்த மாணவி. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து கொண்டார்... உடம்பெல்லாம் பற்றி எரிந்து மாணவி அலறி துடிக்கவும், அக்கம்பக்கத்தினர் வந்து மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.


இந்த சம்பவம் நாடு முழுதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், திரௌபதி படத்தின் இயக்குனர் மோகன் ஜி அவர்கள் ""இவனுங்கள உயிரோட விட்டா நாட்டுக்கு கேடு.. கொளுத்தி விட்ரனும் அப்படியே.." என்று கோபமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

"இவனுங்கள உயிரோட விட்டா நாட்டுக்கு கேடு.. கொளுத்தி விட்ரனும் அப்படியே.." - திரௌபதி இயக்குனர் ஆதங்கம்..! "இவனுங்கள உயிரோட விட்டா நாட்டுக்கு கேடு.. கொளுத்தி விட்ரனும் அப்படியே.." - திரௌபதி இயக்குனர் ஆதங்கம்..! Reviewed by Tamizhakam on June 15, 2020 Rating: 5
Powered by Blogger.