அழகு சாதன பொருட்கள் விளம்பரத்தில் சினிமா நடிகைகள் - சிம்பு, தனுஷ் பட நடிகை ஆவேசம்..!


கடந்த சில நாட்களாக நிறப்பாகுபாடு மற்றும் நிறவெறி குறித்த கருத்துக்கள் சோஷியல் மீடியாவில் வலுப்பெற ஆரம்பித்துள்ளன.

அதிலும் தமன்னா போன்ற சில நடிகைகள் பிரபல நிறுவனங்களின் விளம்பரங்களில் தோன்றி, அழகு சாதனங்களை வாங்க இளம் பெண்களை உற்சாகப்படுத்தி விட்டு, இப்போது நிற பாகுபாடு பற்றி கருத்து சொல்வதை ரசிகர்களே ரசிக்கவில்லை.

உங்கள் பேங் அக்கவுண்டை நிரப்புவதற்காக கருப்பு என்பது அழகில்லை. முகத்தில் பரு இருந்தால் அசிங்கம் என்ற விளம்பரங்களில் நிமிடத்திற்கு நிமிடம் மக்கள் மத்தியில் அதனை ஒளிபரப்பு செய்து உளவியல் ரீதியிலான தாக்கத்தை ஏற்படுத்தி விட்டு இப்போது நீலிக்கண்ணீர் வடிக்கிரீர்களா.? என்று விளாசினார்கள் ரசிகர்கள்.

இந்நிலையில், டஸ்கி ப்யூட்டி என்று பலராலும் அழைக்கப்படும் தனுஷ் மற்றும் சிம்பு ஜோடியாக மயக்கம் என்ன மற்றும் ஒஸ்தி என்ற இரண்டு தமிழ் படங்களில் நடித்த நடிகை ரிச்சா கங்கோபாத்யா, அழகு சாதனா பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என குரல் கொடுத்து அழகு சாதன பொருட்களின் விளம்பரங்களில் நடிக்கும் நடிகைகளுக்கு ஊமைக்குத்து குத்தியுள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, “இதுபோன்ற அழகு சாதன பொருட்களை சுத்தமாக ஒழிக்க வேண்டும் என்றால் அவற்றுக்கான தேவையை முதலில் குறையுங்கள்.

இதுபோன்ற ட்யூப்களில் அடைக்கப்பட்டுள்ள ரசாயன பொருட்கள் நம் உடலுக்கு தீங்கிழைக்கும், கொடிய விஷத்தன்மை வாய்ந்தவை. இதுபற்றி அதிகம் பகிர்ந்து கொள்வதுடன் இதற்கு எதிரான மனுவில் உங்களது கையெழுத்தையும் இடம்பெற செய்யுங்கள்” என கேட்டுக்கொண்டுள்ளார்.

அழகு சாதன பொருட்கள் விளம்பரத்தில் சினிமா நடிகைகள் - சிம்பு, தனுஷ் பட நடிகை ஆவேசம்..! அழகு சாதன பொருட்கள் விளம்பரத்தில் சினிமா நடிகைகள் - சிம்பு, தனுஷ் பட நடிகை ஆவேசம்..! Reviewed by Tamizhakam on June 11, 2020 Rating: 5
Powered by Blogger.