முன்னணி இளம் ஹீரோவுக்கு ஜோடியாகும் சின்னத்திரை நயன்தாரா..! - கையில் இத்தனை படங்களா..???


ஏர் ஹோஸ்டஸ் ஆக தனது பயணத்தைத் தொடங்கிய நடிகை வாணி போஜன், நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் சின்னத்துரையில் கால் பதித்தார். சில ஆண்டுகளுக்கு முன்னர், சன் டி.வி யில் ஒளிபரப்பான ”தெய்வ மகள்” சீரியல் மூலம் இவர் தமிழக மக்களிடம் பிரபலமானார்.

அதன் பின்னர், விளம்பரம், மாடலிங் என வலம்வந்த வாணி போஜன் வெள்ளித்திரையிலும் கால்பதித்து தெலுங்கு நடிகர் விஜய் தேவர் கொண்டா தயாரிக்கும் தெலுங்கு படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார்.

அதே போல இவர் நடித்த “ஒ மை கடவுளே” திரைப்படம் கடந்த காதலர் தினத்தன்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இது குறித்து சில நாட்களுக்கு முன்னர் தனியார் நிறுவனத்துக்குப் பேட்டியளித்த நடிகை வாணி போஜன்,” ஓ மை கடவுளே படம் வெளியானதிலிருந்து எனக்கு நிறையப் பட வாய்ப்பு வருகிறது.

சில பயோபிக் வாய்ப்புகளும் கிடைக்கின்றன. வெள்ளித்திரைக்கு வந்த பிறகு குறிப்பிட்ட கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.

தற்போது, நடிகர் வைபவ் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக "லாக்கப்" என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இத்துடன் அவர் சூர்யா தயாரிக்கும் படத்திலும், விதார்த் நடிக்கும் படத்திலும், ஆதவ் கண்ணதாசன் நடிக்கும் திகில் படத்திலும் நடிக்கவுள்ளார்.

மேலும், விக்ரம் பிரபுவு நடிக்கும் அடுத்த படத்திலும் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளாராம். இப்படத்தை தெலுங்கு சினிமா இயக்குனர் ஒருவர் இயக்கவுள்ளார் என்று கூறப்படுகின்றது.

கைவசம் அரை டஜன் பட வாய்ப்புகளை வைத்துக்கொண்டு பிஸியான சினிமா நடிகையாக மாறியுள்ளார் சின்னத்திரை நயன்தாரா.