கொடும..! கொடும..! - நடிகை பூர்ணாவுக்கு ஆப்பு வைத்தது வேறு யாருமல்ல அவருடைய மேக்-அப் மேன் தானாம்..!


மலையாள சினிமாவில் முன்னணி நடிகையான ஷம்னா காஸிம் தனது பெயரை பூர்ணா என மாற்றி தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். கேரள மாநிலம் கொச்சி மரட் பகுதியில் குடும்பத்துடன் வசித்துவரும் பூர்ணாவின் வீட்டில், திருமணம் சம்பந்தமான பேச்சுவார்த்தைக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கும்பல் சென்றுள்ளது.

பூர்ணாவின் உறவினர் ஒருவரின் பெயரைக் கூறி அவர் அனுப்பியதாக தெரிவித்ததால் அவர்களும் நம்பியுள்ளனர். மேலும், அந்தக் கும்பல் கோழிக்கோட்டிலிருந்து வருவதாக தெரிவித்துள்ளது. திருமணம் சம்பந்தமாக அடிக்கடி பேசியதன் மூலம் அந்த நபர்கள் பூர்ணாவின் பெற்றோருடன் நட்பு ஏற்படுத்தியுள்ளனர்.

இந்தநிலையில், அந்தக் கும்பலைச் சேர்ந்த ரபீக் என்பவர் நடிகை பூர்ணாவை மொபைல் போனில் தொடர்புகொண்டு துபாயில் உள்ள தனது பிசினஸுக்காக உடனடியாக பத்து லட்சம் ரூபாய் வேண்டும் எனக் கேட்டுள்ளார். இதனால் சந்தேகமடைந்த பூர்ணா இதுசம்பந்தமாக பெற்றோரிடம் பேசிவிட்டு முடிவெடுப்பதாகக் கூறியுள்ளார்.

ஆனால், தனக்குப் பணம் அவசரம் என அவர் கூறியுள்ளார். எனவே வீடியோ கால் செய்யும்படி அவரிடம் பூர்ணா கூறியிருக்கிறார். இதைத் தொடர்ந்து போன் தொடர்பைத் துண்டித்தவர், பின்னர் சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டார்.

அதன் பிறகு பூர்ணாவின் பெற்றோர் அந்தக் கும்பல் கொடுத்த முகவரி குறித்து விசாரித்தபோது அது போலியானது எனத் தெரியவந்தது. இதற்கிடையில் அந்தக் கும்பல் பூர்ணாவின் வீட்டுக்குச் சென்று வீட்டையும் வீடு அமைந்துள்ள பகுதியையும் வீடியோ எடுத்துள்ளனர்.

பின்னர் பூர்ணாவின் பெற்றோரிடம் தங்களுக்குப் பணம் கொடுக்காமல் இருந்தால் பூர்ணாவின் கேரியரை பாழாக்கிவிடுவோம் என்றும், கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.

இதுகுறித்து பூர்ணாவின் தந்தை காஸிம், கொல்லம் மரட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் விசாரணை நடத்தி வாடனாப்பள்ளியைச் சேர்ந்த ரபீக், கடவனூரைச் சேர்ந்த ரமேஷ், சரத், அஷ்ரப் ஆகிய நான்கு பேரைக் கைது செய்தனர்.

நடிகை பூர்ணா திருமண மோசடி கும்பலிடம் சிக்கி, கடைசி நேரத்தில் அவர்களிடம் இருந்த தப்பித்த நிகழ்வு கடந்த இரண்டு நாட்களாகவே பரபரபப்பு செய்தியாக மாறியுள்ளது.

தங்களை பெரிய பணக்காரர்களாக கட்டிகொண்டு திருமணம் மற்றும் சினிமா வாய்ப்பு வாங்கி தருவது என்கிற பெயரில் மோசடி செய்து வந்த கும்பலை சேர்ந்த ஏழு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் விசாரித்ததில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.

அதாவது பூர்ணாவுக்கு படப்பிடிப்பு தளங்களில் மேக்கப் மேனாக பணியாற்றியவர் தான் இந்த மோசடிக்கு உடைந்தையாக இருந்துள்ளாராம். மாப்பிள்ளை வீட்டினர் வசதியானவர்கள் என பூர்ணாவிடம் அவரது குடும்பத்தினரிடமும் கூறி இருதரப்பையும் திருமண விஷயமாக தொடர்பு கொண்டு பேச வைத்ததும் அவர் தானாம். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சிக்கியுள்ள ஷெரீப் என்பவனின் உறவுக்காரர் தான் இந்த மேக்கப் மேனாம்.

அதுமட்டுமல்ல, இன்னொரு குற்றவாளியான ரபீக் என்பவனின் பெண் தோழி ஒருவரும் மாப்பிள்ளையின் சகோதரி என அறிமுகப்படுத்தி கொண்டு பூர்ணாவிடம் பேசி அவரை நம்ப வைத்தாராம். தற்போது தலைமறைவாக இருக்கும் இந்த இரண்டு நபர்களையும் போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கொடும..! கொடும..! - நடிகை பூர்ணாவுக்கு ஆப்பு வைத்தது வேறு யாருமல்ல அவருடைய மேக்-அப் மேன் தானாம்..! கொடும..! கொடும..! - நடிகை பூர்ணாவுக்கு ஆப்பு வைத்தது வேறு யாருமல்ல அவருடைய மேக்-அப் மேன் தானாம்..! Reviewed by Tamizhakam on June 28, 2020 Rating: 5
Powered by Blogger.