"துப்பாக்கி படத்துல நடிச்சத நெனச்சு ரொம்ப வருத்தப்படுறேன்" - பிரபல நடிகை ஒப்பன் டாக்..!
Stylish தமிழச்சி... இள நெஞ்சிக்குள்ள English தமிழச்சி.. என ஆரம்பம் படத்தில் கவர்ச்சி காடாக பிரபலமானவர் நடிகை அக்ஷரா கவுடா. தமிழில் விஜய்யின் ‘துப்பாக்கி’ படம் மூலம் அறிமுகமானவர்.
பின்னர் இவர் அஜீத்தின் ‘ஆரம்பம்‘ படத்தில் நடித்ததன் மூலம் ‘ஸ்டைலிஷ் தமிழச்சி’ என அழைக்கப்பட்டார். அதையடுத்து ‘போகன்’ படத்தில் ஜெயம் ரவியுடன் போலீஸ் அதிகாரியாக செம்ம ஹாட்டாக நடித்திருந்தார்.
தற்போது தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களில் நடித்து வருகிறார்.தமிழ் சினிமாவில் தன்னுடைய கவர்ச்சி இமேஜை உடைக்க கடினமாக இருப்பதாகவும், மேலும் இயக்குனர்கள் கவர்ச்சியான பாத்திரங்களுக்காக மட்டும் தன்னை அணுகுகிறார்கள்.
நான் இந்த மாதிரியான பாத்திரங்களில் மட்டும் நடிப்பேன் என்று மக்கள் நினைப்பது தனக்கு வருத்தமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.“இதனால்தான் ஒரு வருடமாக எந்தப் படத்திலும் நடிக்க ஒத்துக்கொள்ளாமல், நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்காக காத்துக் கொண்டிருந்தேன்.
என்னால் நல்ல நாயகியாகவும் நடிக்க இயலும். எனவே, அப்படிப்பட்ட படங்களில் நடிக்க இயக்குனர்கள் என்னை அணுகுவார்கள் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்” என்று கூறியிருந்தார் அக்ஷரா கவுடா.
இந்நிலையில், சமீபத்தில் பிரபல ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் பேசிய அவர், நான் ஏன் துப்பாக்கி படத்தில் நடித்தேன் என நினைத்து மிகவும் வருத்தப்பட்டேன். அந்த கதாபாத்திரம் எனக்கு பிடிக்கவில்லை.
ஆனால், விஜய் சார், முருகதாஸ் சார் ஆகியோருடன் பணியாற்றியது புதிய அனுபவமாக இருந்தது. மகிழ்ச்சியாகவும் இருந்தது. ஆரம்பம் படத்தில் அஜித் சாரை பார்த்து மெய்சிலிர்த்து போனேன் என்று கூறியுள்ளார்.
"துப்பாக்கி படத்துல நடிச்சத நெனச்சு ரொம்ப வருத்தப்படுறேன்" - பிரபல நடிகை ஒப்பன் டாக்..!
Reviewed by Tamizhakam
on
July 11, 2020
Rating:
