நித்யா மேனன் திருமணம் - துல்கர் சல்மான் கொடுத்த அட்வைஸ்..!


பொதுவாக சினிமா ஹீரோயின்கள் என்றாலே மார்கெட் சரிந்து ஆள் அடையாளம் தெரியாமல் போகும் வரை கல்யாணம் என்ற பேச்சுக்கே போக மாட்டார்கள். அப்படி, பீக்கில் இருக்கும்போதே திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகி விடும் நடிகைகள் ஒருசிலர் மட்டுமே.

மார்க்கெட் இருக்கும் வரை நடித்து கல்லா கட்ட முடியும் என்பதால் பல நடிகைகளும் சினிமாவில் இருந்து ஒய்வு பெறும் சமயத்தில் தான் திருமண வாழ்க்கையை பற்றி யோசிக்கின்றனர்.

அந்த வகையில் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக நடித்துவரும் நித்யா மேனனும் திருமணத்தை பற்றி இன்னும் யோசிக்க கூட இல்லையாம். ஆனால் இவருடன் உஸ்தாத் ஹோட்டால், 100 டேய்ஸ் ஆப் லவ் ஆகிய படங்களில் ஜோடியாக நடித்த நடிகர் துல்கர் சல்மான், தன்னுடைய திருமண வாழ்க்கை எவ்வளவு இனிமையானது என அடிக்கடி நித்யா மேனனிடம் கூறுவாராம்.

இதுபற்றி நித்யா மேனன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறும்போது, “துல்கர் ஒரு அக்மார்க் குடும்ப தலைவர். என்னையும் குறிப்பிட்ட காலத்திற்குள் திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் நுழையும்படி கூறி அவ்வப்போது கன்வின்ஸ் செய்ய முயற்சித்தார்” எனவும் ஆனால், எனக்கு அந்த யோசனையே இல்லை என்றும் கூறியுள்ளார்.

நித்யா மேனன் திருமணம் - துல்கர் சல்மான் கொடுத்த அட்வைஸ்..! நித்யா மேனன் திருமணம் - துல்கர் சல்மான் கொடுத்த அட்வைஸ்..! Reviewed by Tamizhakam on July 06, 2020 Rating: 5
Powered by Blogger.