உறுதியானது தளபதி 65 கூட்டணி - புலம்பும் ரசிகர்கள்..!


'தளபதி 65' படம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடமிருந்து தேனாண்டாள் பிலிம்ஸுக்கு கைமாறிவிட்டதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் இச்செய்தி முற்றிலும் தவறானது என சற்று முன்பு தெரியவந்துள்ளது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'மாஸ்டர்'. இந்தப் படத்தின் பணிகள் அனைத்துமே முடிந்துவிட்டாலும், கரோனா அச்சுறுத்தலால் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. 

ஓடிடி வெளியீட்டுக்குப் பல்வேறு முன்னணி ஓடிடி தளங்கள் பேச்சுவார்த்தை நடத்தினாலும், அந்த வேலையே ஆகாது. இது வெறும் படம் அல்ல லட்சக்கணக்கான விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பு. அதனை வினாடிக்க மாட்டோம். ஒரு வருஷம் ஆனாலும் சரி படம் தியேட்டர்ல தான் ரிலீஸ் ஆகும் என்று கறார் காட்டுகிறார் தயாரிப்பாளர்.

மாஸ்டர்' படத்துக்குப் பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் படத்துக்குத் தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் விஜய். இதன் பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகின்றன. கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் படப்பிடிப்புக்குச் செல்லத் திட்டமிட்டார்கள். 

இதனிடையே, இந்தப் படத்துக்காக சம்பளக் குறைப்பு, பட்ஜெட் குறைப்புக்கு சன் பிக்சர்ஸ் பேசியதாகவும் அதற்கு விஜய் சம்மதிக்கவில்லை என்றும் தகவல் வெளியானது. இதனால் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு விஜய் இந்தப் படத்தை மாற்றிவிட்டதாகவும் செய்தி வெளியானது. 


இது தொடர்பாக விசாரித்தபோது சன் பிக்சர்ஸ் இப்படி ஒரு பேச்சு வார்த்தையே நடத்தவில்லை என்று தெரிய வந்துள்ளது. இது ஒரு பக்கம் விஜய் - முருகதாஸ் கூட்டணி துப்பாக்கி, கத்தி, சர்கார் என தொடர்ந்து இப்போது நான்காவது முறையாக இணைந்துள்ளது ரசிகர்களுக்கு ஒரு வகையில் மகிழ்ச்சி.


ஆனால், முருகதாசின் சர்கார், தர்பார் படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ரசிகர்களுக்கு திருப்தியாக அமையவில்லை. சர்கார் படம் எல்லாம் விரக்தியின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. இதனால், தளபதி 65 படத்தை பெருமையாக எடுங்கள். நேரம் இருக்கிறது. ஏமாற்றி விடாதீர்கள் என்று ஒரு தரப்பு ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
Previous Post Next Post
--Advertisement--