வெறும் சிம்மீஸ் - கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் - கவர்ச்சி போஸ் கொடுத்து நெட்டிசன்களை ஷாக் ஆக்கிய சீரியல் நடிகை..!
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தை சேர்ந்தவர் சந்தியா. தமிழ், தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கு படங்களிலும் சிறு, சிறு கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
செல்லமடி நீ எனக்கு சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானார் சந்தியா.சேத்தன், தேவதர்ஷினி நடிப்பில் வெளியாகி பிரபலமான அத்திப்பூக்கள் சீரியலில் கற்பகம் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சந்தியா.
ரம்யா கிருஷ்ணன் நடித்த வம்சம் சீரியலில் டாக்டர் மதனின் மனைவி பூமிகாவாக நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். வம்சம் சீரியலை அடுத்து தமிழ் ரசிகர்கள் சந்தியாவை பூமிகா என்று அழைக்கத் துவங்கிவிட்டனர்.
அந்த அளவுக்கு வம்சம் சீரியல் சந்தியாவுக்கு பெயரும், புகழும் வாங்கிக் கொடுத்தது.இவரின் முழுப் பெயர் சந்தியா ஜகர்லமுடி. தமிழ் மற்றும் தெலுங்கு தொலைக்காட்சி துறையிலும், சில தெலுங்கு சினிமாவிலும் நடித்து வருகிறார். சந்தியா 1985 ஏப்ரல் 15 ஆம் தேதி ஹைதராபாத்தில் பிறந்தார்.
எஸ்.என்.சக்தி வேல் இயக்கி, ராதா கிருஷ்ணன் தயாரித்த ’செல்லமடி நீ எனக்கு’ என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார்.சந்தியா தனது பள்ளிப்படிப்பை செயிண்ட் ஜோசப் பள்ளியில் படித்தார்.
அதைத் தொடர்ந்து, M.A ஆங்கில இலக்கியம், M.Sc உளவியல் ஆகிய முதுகலைப் பட்டங்களையும் தன் வசம் வைத்துள்ளார். சந்தியா ஜகர்லமுடி ஒரு பன்முகத் திறமை கொண்ட பெண்.
அவர் தனது கல்வியில் தொடங்கி தனது வாழ்க்கையை சமநிலைப்படுத்துவது வரை எல்லா வழிகளிலும் பெர்ஃபெக்டாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இவரின் சொந்த ஊர் ஹைதராபாத், தெலுங்கானா, ஆனால் சின்னத்திரையில் நடித்துக் கொண்டிருப்பதால், சென்னையில் வசிக்கிறார்.
இன்ஸ்டாகிராமில்சுறுசுறுப்பாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,கடற்கரையில் கவர்ச்சி உடையில் அமர்ந்திருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்தரசிகர்கள், சீரியலில் குடும்பப்பாங்கினியாக தோன்றும் பூமிகாவா இது என்று ஷாக் ஆகி கிடக்கிறார்கள்.
வெறும் சிம்மீஸ் - கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் - கவர்ச்சி போஸ் கொடுத்து நெட்டிசன்களை ஷாக் ஆக்கிய சீரியல் நடிகை..!
Reviewed by Tamizhakam
on
August 20, 2020
Rating:
