பண்பலை நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணிபுரிந்த வைஷ்ணவி அண்மையில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.பிரபல எழுத்தாளர் சாவியின் பேத்தியான இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அனைவரும் அறியப்படும் நபராக மாறினார்.
பிக்பாஸ் வீட்டில் இருந்த போது மற்றவர்களைப் பற்றி அதிகம் பேசியதால் இவரை சில நாட்கள் தனிமைப்படுத்தி வைத்திருந்தார் பிக்பாஸ். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்படும் இவர் , நீச்சல் உடையில் கடலில் நீர்ச்சறுக்கி விளையாடும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார்.
இதில் அவர் கூறியுள்ளதாவது, இந்த படத்தில் நான் எப்படி இருக்கிறேன் என்று எனக்கு நிச்சயமாக தெரியவில்லை. ஊடகங்கள் அழகாக இருக்கும் நடிகைகளை மட்டுமே கவனிக்கின்றன. தட்டையான வயிறு, வாளிப்பான தொடை, அழகிய தோல் கொண்ட நடிகைகள் மட்டுமே கவனிக்கப்படுகிறார்கள்.
உண்மையான உடலில் கவர்ச்சி என்பதே கிடையாது. உண்மையான உடலில், கீறல்கள், காயங்கள் இருக்கும். நான் வலிமையாக இருக்கேன். ஆரோக்கியமாக இருக்கேன்.என்று கூறியுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், உங்களுக்கென்ன நீங்கள் கவர்ச்சியாகவே இருக்கிறீர்கள். என்று கமென்ட்டில் தெரிவித்து ஹார்டின்களை பறக்க விட்டு வருகிறார்கள்.



