"எதாவது சொல்றதுக்குள்ள டெலிட் பண்ணிடுங்க.." - பிகில் பட நடிகை வெளியிட்ட புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்..!


விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படத்தில் அவரது கால்பந்து அணியில் இருக்கும் முக்கிய வீராங்கனையாக நடித்திருந்தார் வர்ஷா பொல்லம்மா. அதற்கு முன்பு அவர் விஜய் சேதுபதியுடன் 96, சசிகுமாருடன் வெற்றிவேல் போன்ற படங்களிலும் நடித்துள்ளார் வர்ஷா.

தற்போது புதிதாக வர்ஷா பொல்லம்மா எந்த புதிய படத்திலும் ஒப்பந்தம் ஆகவில்லை. மேலும் இப்போது கொரோனா ஊரடங்கு என்பதால் வீட்டுக்குள்ளேயே நேரத்தை செலவிட்டு வருகிறார் அவர்.தமிழில் சதுரம் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் வர்ஷா. 

அதன்பிறகு வெற்றிவேல், பெட்டிக்கடை, இவன் யார் என்று தெரிகிறதா போன்ற மொக்கை படங்களில் நடித்து வாய்ப்பில்லாமல் தடுமாறினார். பார்ப்பதற்கு நஸ்ரியா சாயலில் இருந்தாலும் அதற்கு தகுந்த கதாபாத்திரம் அமையாமல் தடுமாறி வந்தார். 

இந்நிலையில் தான் அவருக்கு கைகொடுத்தது விஜய் சேதுபதியின் 96 படம்.அந்த படத்தில் ஓரளவு ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவர் வர்ஷாவுக்கு கைமேல் பலன் கிடைத்ததைப் போல விஜய்யின் பிகில் பட வாய்ப்பு கிடைத்தது. 

இந்தப் படம்தான் அவருக்கு இரண்டாவது இன்னிங்சை தொடங்க காரணமாக அமைந்தது என்று கூட சொல்லலாம்.தமிழில் இழுத்துப் போர்த்தி நடித்து வந்த வர்ஷா பொல்லம்மா தெலுங்கில் கொஞ்சம் கவர்ச்சி காட்ட ஒப்புக் கொண்டுள்ளாராம். 

தெலுங்கு சினிமாவை பொருத்தவரை கவர்ச்சி இருந்தால் மட்டுமே வண்டியை ஓட்ட முடியும் என்பதை தெளிவாக புரிந்து வைத்துள்ளார்.கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு பிகில் திரைப்படம் வெளியானது. 

அதற்கு முன்னதாக படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், அந்த படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நடிகர் விஜய் பிகில் பெயர் பொறிக்கப்பட்ட தங்க மோதிரத்தை பரிசாக அளித்தார். தற்போது பிகில் மோதிரத்தை காட்டியபடி போட்டோ போட்டு ஒரு வருடம் ஆகுது நண்பர்களே என பதிவிட்டுள்ளார் வர்ஷா பொல்லம்மா.ஆனால், விஜய் ரசிகர் ஒருவர் கடந்த ஒருவாரமாக தன்னுடைய சமூக வளைத்தள பக்கத்தில் நான் இறக்கப்போகிறேன். உங்களை விட்டு ரொம்ப தூரம் போகப்போகிறேன் என்று பதிவு செய்து வந்தது மட்டுமில்லாமல் நேற்று தற்கொலையும் செய்து கொண்டது விஜய் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


விஜய் ரசிகர்கள் கடுமையான சோகத்தில் இருக்கும் இந்த நிலையில், பிகில் மோதிரத்தை வைத்து ஒரு வருஷம் ஆச்சு என்று வர்ஷா கொண்டாட்ட மனநிலையில் இருப்பதை கண்ட விஜய் ரசிகர்கள் கடுப்பாகி விட்டனர். ஏதாவது சொல்றதுக்குள்ள ட்வீட்டை டெலிட் பண்ணிடுங்க என்று கடுப்பாக ரிப்ளை செய்துள்ளார் ஒரு விஜய் ரசிகர்.

"எதாவது சொல்றதுக்குள்ள டெலிட் பண்ணிடுங்க.." - பிகில் பட நடிகை வெளியிட்ட புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்..! "எதாவது சொல்றதுக்குள்ள டெலிட் பண்ணிடுங்க.." - பிகில் பட நடிகை வெளியிட்ட புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on August 14, 2020 Rating: 5
Powered by Blogger.