நீங்களும் இங்கே வந்துட்டீங்களா..? - பல வருடங்களுக்கு பிறகு ரீ-என்ட்ரி ஆகும் காதல் சந்தியா..!


காதல் படத்தில் பள்ளிப்பருவ மாணவியாக, ஹீரோயினாக நம் மனங்களை ஈர்த்தவர் சந்தியா. இப்படம் இவருக்கு தனி அடையாளத்தை சினிமாவில் உருவாக்கி கொடுத்தது. 

இதன் பின் டிஷ்யூம், வல்லவன், கூடல் நகர் ஆகிய படங்களில் நடித்திருந்தார். 2015 டிசம்பரில் அவர் திருமணம் செய்து கொண்டார். 

இவருடைய திருமணம் சென்னையில் நடைபெறும் என அறிவிப்பு வெளியானது. அதன்படியே ஊர் முழுக்க பத்த்ரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், மழை வெள்ளத்தால் சென்னை துண்டிக்கப்பட்ட காரணத்தால் கேரளாவில் உள்ள பிரசித்து பெற்ற ஒரு கோவிலில் எளிமையாக திருமணம் நடந்தது.

தன் திருமண நிச்சயதார்தத்தை நிறுத்தி அந்த பணத்தை சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அவர் வழங்கியதை மறக்காமல் நாம் நினைவு கூறவேண்டியது அவசியம். 

திருமணத்திற்கு பின் குழந்தை, குடும்பம் என சினிமா பக்கம் அவர் எட்டியே பார்க்கவில்லை எனலாம். தற்போது முக்கிய டிவி சானலில் ஒளிபரப்பாகும் கண்மணி சீரியலில் அவர் கவுரவத்தோற்றத்தில் நடித்துள்ளாராம். 

கொரோனா ஊடரங்கால் தற்போது படப்பிடிப்புகள் இல்லாத சூழ்நிலையில் பலரும் டிவி சிரியல்கள் பக்கம் திரும்பி வருகிறார்கள். சந்தியா சினிமா பக்கம் வந்தாலும் சந்தோசம் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
நீங்களும் இங்கே வந்துட்டீங்களா..? - பல வருடங்களுக்கு பிறகு ரீ-என்ட்ரி ஆகும் காதல் சந்தியா..! நீங்களும் இங்கே வந்துட்டீங்களா..? - பல வருடங்களுக்கு பிறகு ரீ-என்ட்ரி ஆகும் காதல் சந்தியா..! Reviewed by Tamizhakam on August 17, 2020 Rating: 5
Powered by Blogger.