தலைவருக்கு போன் செய்து அரை மணி நேரம் உரையாடிய தல - என்ன காரணம்..?


நடிகர் ரஜினி தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 45 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இந்த சாதனைக்காக திரையுலகைச் சேர்ந்தவர்கள் அவருக்கு வாழ்த்துக்களைக் கூறி வருகின்றனர். 

ரசிகர்களும் சமூக ஊடகங்களில் இதனை சிறப்பாக கொண்டாடினர். அதற்கு பதிலளிக்கும் வகையில் ரஜினியும், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, ரசிகர்கள் இல்லாமல் நான் ஒன்றும் இல்லை என்று தெரிவித்திருந்தார்.

அடுத்த வருடம் நடக்கும் சட்டமன்ற தேர்தலில் ரஜினி தனியாக கட்சி ஆரம்பித்து இளைஞர்களை முன்னிருத்தி தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறார். மக்களும் அரசியல் மற்றும் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்று ரஜினிக்கு ஆதரவாக நிற்கிறார்கள்.

இந்நிலையில், தன்னுடைய 65 ஆண்டு திரையுலக வாழ்கையை கொண்டாடும் ரஜினிகாந்திற்கு நடிகர் அஜித்தும் போன் செய்து தனிப்பட்ட முறையில் தனது வாழ்த்துக்களை ரஜினிக்கு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. சுமார் 30 நிமிடங்கள் அவர்கள் இருவரும் உரையாடியதாகவும், அப்போது நடிகர் அஜித் ரஜினியுடன் அரசியல் உள்ளிட்ட பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைவருக்கு போன் செய்து அரை மணி நேரம் உரையாடிய தல - என்ன காரணம்..? தலைவருக்கு போன் செய்து அரை மணி நேரம் உரையாடிய தல - என்ன காரணம்..? Reviewed by Tamizhakam on August 14, 2020 Rating: 5
Powered by Blogger.