நடிகை ஹன்ஷிகாவுடைய Ex Boyfriend-ன் கேரக்டர் இது தான்..!


அறிமுக இயக்குனர் "ஜமீல்" அவர்கள் இயக்கத்தில் நடிகை ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘மஹா’. இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். திரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படம், ஹன்சிகாவிற்கு 50-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய போது இதன் போஸ்டரில் நடிகை ஹன்ஷிகா காவி உடையில் கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்தபடி புகைப்பிடிப்பது போன்று இருக்கும் ஒரு போஸ்டர் வெளியானது.

ஆனால், அதே ஹன்ஷிகா புர்கா சகிதமாக அமர்ந்து கொண்டு நமாஸ் செய்து கொண்டிருக்கும் போஸ்டரும் வெளியானது. இதனை தொடர்ந்து, அது எப்படி காவி உடை அணிந்திருக்கும் பெண் புகை பிடிக்கிறார். ஆனால், புர்கா அணிதிருக்கும் பெண் நமாஸ் செய்து கொண்டு இருக்கிறார் என்று இயக்குனர் ஜமீலை நோக்கி கேள்விகள் முன் வைக்கப்பட்டுள்ளன.

ஆனால், இதுவரை அதற்கு அவர் பதில் எதுவும் கொடுக்கவில்லை. நிச்சயம் படம் ரிலீஸ் ஆகும் போது இதற்க்கான எதிர்ப்பு இருக்கும் என கூறுகிறார்கள். இந்நிலையில் ‘மஹா’ படத்தில் நடிகை ஹன்சிகாவின் Ex Boyfriend நடிகர் சிம்பு படத்தில் இணைந்தார். 

இது நம்ம ஆளு படத்தில் சிம்பு நயன்தாரா இணைந்து நடித்ததே படத்திற்கு பெரிய விளம்பரம் ஆகி கண்சிமான வசூலை அள்ளியது. அதே போல, இந்த படமும் வசூலை அள்ளும் என நினைத்தார்களோ..? என்னவோ..? சிம்பு-ஹன்ஷிகாவை இணைத்து விட்டனர். 

இயக்குனர், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘மௌன ராகம்’ படத்தின் பிளேஷ்பேக்கில் கார்த்திக் வருவார். இதில் மிகவும் அழுத்தமாக கேரக்டர். இன்றளவும் மறக்க முடியாத அளவு, அனைவர் மனதிலும் இடம்பிடித்து விட்டது. 

அதேபோன்ற அழுத்தமான கேரக்டரில் சிம்பு நடிக்கிறார் என்று கூறப்பட்டது. இதுகுறித்த விஷயத்தை படக்குழுவினர் ரகசியமாக வைத்திருந்தனர். இந்நிலையில், படத்தில் சிம்புவின் கேரக்டர் குறித்து சில தகவல்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதன் படி, சிம்பு இந்த படத்தில் ஒரு விமானியாக நடிக்கிறார் எனவும், படத்தில் மொத்தமாகவே 40 நிமிட காட்சியில் தான் சிம்பு தோன்றுவார் என்றும் கூறுகிறார்கள்.

நடிகை ஹன்ஷிகாவுடைய Ex Boyfriend-ன் கேரக்டர் இது தான்..! நடிகை ஹன்ஷிகாவுடைய Ex Boyfriend-ன் கேரக்டர் இது தான்..! Reviewed by Tamizhakam on August 12, 2020 Rating: 5
Powered by Blogger.