பிக்பாஸ் 4-ல் இந்த கொழுக்கு மொழுக்கு கவர்ச்சி நடிகையும் இருக்காங்க - அப்போ அதுக்கு பஞ்சமே இருக்காது..!


 
நடிகரும், மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தொகுத்து வழங்க இருக்கும் பிக்பாஸ் 4வது சீசனில் மேலும் ஒரு கொழுக்கு மொழுக்கு கவர்ச்சி நடிகை கலந்துக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த வருடம் தள்ளி போகியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான முதல் ப்ரமோ வீடியோ வெளியானது. 
 
இது ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது. யாரெல்லாம் போட்டியாளர்களாக வரப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்கள் மத்தியில் எழுந்தது. 
 
இதில், ரம்யா பாண்டியன், குக்வித் கோமாளி புகழ், நடிகை கிரண், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் பட ரோயின் ஷில்பா மஞ்சுநாத் ஆகியோர் பெயர்கள் அடிப்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில், றெக்க, மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்த இளம் கவர்ச்சி நடிகை ஷாலு ஷம்மு நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஷாலு ஷம்முவிடம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அழைப்பு வந்ததாகவும், இன்னும் உறுதியாவில்லை என்றும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
 
கடந்த பிக்பாஸ் சீசன் 3-லேயே கலந்து கொள்ளும் வாய்ப்பு வந்ததாகவும் ஆனால் இறுதி நேரத்தில் மிஸ் ஆகி விட்டதாகவும் ஷாலு ஷம்மு ஏற்கனவே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சமூக வலைதளங்களில் காட்டு காட்டு என கவர்ச்சி காட்டி வரும் ஷாலு ஷம்முவால் பிக்பாஸ் சீசன் 4-ல் கவர்ச்சிக்கு பஞ்சமே இருக்காது. விரைவில் யார் யார் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வார்கள் என்ற பட்டியல் வெளியாகும் என்று கூறுகிறார்கள்.

பிக்பாஸ் 4-ல் இந்த கொழுக்கு மொழுக்கு கவர்ச்சி நடிகையும் இருக்காங்க - அப்போ அதுக்கு பஞ்சமே இருக்காது..! பிக்பாஸ் 4-ல் இந்த கொழுக்கு மொழுக்கு கவர்ச்சி நடிகையும் இருக்காங்க - அப்போ அதுக்கு பஞ்சமே இருக்காது..! Reviewed by Tamizhakam on September 12, 2020 Rating: 5
Powered by Blogger.