பார்க்கில் வெறும் ப்ராவுடன் கோமாளி பட நடிகை - சரமாரிய தாக்கிய பொதுமக்கள் - வைரலாகும் வீடியோ..!


கோமாளி படத்தில் ஜெயம் ரவியுடன் நடித்திருந்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. மேலும் வாட்ச்மேன், பப்பி உள்ளிட்ட தமிழ்ப்படங்களிலும், கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 
 
சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் நடன வீடியோக்களை பதிவேற்றுவார். இந்நிலையில் பூங்கா ஒன்றிற்கு நண்பர்களுடன் சென்ற சம்யுக்தா ஹெக்டே பொதுமக்களால் தாக்கப்பட்டதாக கூறி இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவு செய்துள்ளார். 
 
அந்த வீடியோவில், பூங்காவிற்கு உடற்பயிற்சி செய்ய தானும் தனது நண்பர்கள் 3 பேருடன் வந்ததாக தெரிவித்திருக்கும் அவர், தனது உடையைக் காரணம் காட்டி அங்கிருந்த சிலர் தனது நண்பர்களை தாக்கியதாகவும், ஆபாச நடனமாடியதாக பொய் புகார் கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
 
அதேவீடியோவில் பெண் ஒருவர் சம்யுக்தாவைப் பார்த்து பொது இடத்தில் நாகரீகமாக நடந்து கொள்ள வேண்டாமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த வாக்குவாதத்தின் போது அங்கு காவல்துறையினர் வந்து விசாரணை நடத்துவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. 

 
மேலும் தன்னை பூங்காவை விட்டு வெளியேற முடியாதபடி கதவை பூட்டியிருப்பதையும் சம்யுக்தா ஹெக்டே தனது லைவ் வீடியோவில் காண்பித்துள்ளார். 

 
மேலும் அந்த வீடியோவில் தன்னை மருத்துவர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட நபர் ஒருவர் சம்யுக்தாவின் மீது எந்த தவறும் இல்லை என்றும் கூறியுள்ளார். இந்த சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.


நடிகை சம்யுக்தா ஹெக்டேவின் இந்த கதறல் வீடியோவை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பார்க்கில் ஸ்போர்ட்ஸ் பிராவுடன் உடற்பயிற்சி செய்ததற்காக நடிகை ஒருவர் சரமாரியாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பார்க்கில் வெறும் ப்ராவுடன் கோமாளி பட நடிகை - சரமாரிய தாக்கிய பொதுமக்கள் - வைரலாகும் வீடியோ..! பார்க்கில் வெறும் ப்ராவுடன் கோமாளி பட நடிகை - சரமாரிய தாக்கிய பொதுமக்கள் - வைரலாகும் வீடியோ..! Reviewed by Tamizhakam on September 04, 2020 Rating: 5
Powered by Blogger.